ஹொட்ஹார்ட் சுரங்கவழியை மாற்ற புதிய யோசனை
ஐரோப்பாவின் மிக நீளமான சுரங்கப் பெருவீதியான ஹொட்ஹார்ட் சுரங்க வழியை தொடரூந்து மூலம் வாகனங்களை பரிமாற்றம் செய்யும் பாதையாக மாற்றுமாறு புதிய யோசனை தெரிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் உத்தேசிக்கபட்டுள்ள இரண்டாவது சுரங்க வழியை அமைக்கவேண்டிய தேவை இல்லை என்றும் இப்புதிய யோசனையில் தெரிவிக்கபட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் வடக்கு தெற்கு நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையான ஹொட்ஹார்ட் சுரங்கவழி பத்து வருடங்களுக்கு ஒருமுறை முழுமையாக திருத்தியமைக்கபடவேண்டிய தேவை உள்ளது. தற்போது ஒரு சுரங்கவழி மட்டுமே இருப்பதால் வீதித்திருத்தும் வேலைகளில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுவருகின்றன. அதனால் இரண்டாவது சுரங்கவழி அமைக்கபடவேண்டும் என்றது பல நாட்களாக சுவிஸ் மக்களால் வலியுறுத்த பட்டு வருகின்ற போதிலும் இதை அமைக்க தேவையான பெருந் செலவு இரண்டாவது பாதை அமைப்பதை ஒத்திப்போடவைத்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது பாதை அமைப்பதற்கு பதிலாக தொடரூந்து முலம் வாகனங்களை ஏற்றி இறக்கும் யோனை தெரிவிக்கபட்டுள்ளது. சுவிற்சர்லாந்தில் ஏற்கனவே Lötschberg சுரங்க வழியில் இம்முறை நடைமுறையில் உள்ளது. ஆகவே ஹொட்ஹார்ட் வழியையும் அதைப்போல மாற்றுவதன் மூலம் இரண்டாவது வழியை அமைக்கும் பணத்தை மீதப்படுத்த முடியும்.
0 comments :
Post a Comment