Saturday, February 6, 2010

பிரிட்டனின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்கு.


பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்குபேர் தங்களின் செலவினங்களுக்காக அரசிடமிருந்து பெற்ற தொகையில் தவறு செய்ததாக கூறப்பட்டு, இதற்காக அவர்கள்மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தங்களின் செலவினங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக வெளியான செய்திகளை தொடர்ந்து பிரிட்டிஷ் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவுக்கு கோபம் உருவானது.

இது தொடர்பில் ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், பிரதான எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசு தரப்பு வழக்குகளுக்கான இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற நடைமுறைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்க முடியாது என்கிற நாடாளுமன்ற உரிமைகள் தொடர்பான விதியின் கீழ் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை இருந்துவரும் பாதுகாப்பு நடைமுறையும், இந்த நான்குபேர் மீதான வழக்குகளின் போது நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment