Monday, February 8, 2010

வேலை நிலவரப் புள்ளி விவரம் நம்பிக்கையளிக்கிறது: ஒபாமா

பொருளியல் மந்தநிலையிலிருந்து அமெரிக்கா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்பதைப்
புதிய வேலை நிலவரப் புள்ளிவிவரம் காட்டுவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் புள்ளிவிவரம் நம்பிக்கையளித்தாலும், கொண்டாடுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று அவர் எச்சரித்தார்.

எதிர்வரும் மாதங்களில் புள்ளிவிவரம் மாறுபடக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 10 விழுக்காட்டில் இருந்து, ஜனவரி மாதம் 9.7 விழுக்காட்டுக்குக் குறைந்தது. வேலையின்மை விகிதம் 10.1 விழுக்காடாக உயரும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஓராண்டுக்கு முந்திய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் வேலை இழப்பு புள்ளிவிவரம் மேம்பட்டிருப்பதாக அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.

நம்பிக்கையளிக்கும் புள்ளிவிவரங்களை வரவேற்றாலும், மக்களை மீண்டும் வேலையில் அமர்த்த இன்னும் அதிகம் செய்யப்படவேண்டும் என்று வெள்ளை மாளிகையும் கருத்துரைத்தது. வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால், நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் தங்களைத் தண்டிக்கக்கூடும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர்.

No comments:

Post a Comment