இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 9 சிங்கள மீனவர்கள் கைது.
இந்திய கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 படகுகளில் சிங்கள மீனவர்கள் சிலர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். உடனே, 2 படகுகளையும் சுற்றி வளைத்த காவல் படையினர் அதில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 9 பேரையும் சென்னை துறைமுக மிதக்கும் காவல் நிலையத்தில் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர்.
0 comments :
Post a Comment