ஓராண்டில் 71 செய்தியாளர்கள் கொலை
சென்ற ஆண்டு உலகெங்கிலும் 71 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 33 பேர் பிலிப்பீன்ஸில் கொல்லப்பட்டதாக நியூயார்க்கிலுள்ள “செய்தியாளர்களைப் பாதுகாக்கும் குழு” (CPJ) தெரிவித்தது. ஓராண்டில் இத்தனை அதிகமான செய்தியாளர்கள் கொல்லப்பட்டதற்கு இரு முக்கிய சம்பவங்கள் காரணமென குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
பிலிப்பீன்ஸின் மகுன்டனாவ் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த கொலைகளும், சோமாலியாவில் கொடூரமாகிவரும் வன்செயலும் அக்காரணங்களாகும். “செய்தியாளர்கள் மீது 2009ல் நடந்த தாக்குதல்கள்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, 2008ம் ஆண்டு சுமார் 41 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அதற்குமுன் 2007ம் ஆண்டு ஈராக்கில் வன்செயல் தலைவிரித்தாடியபோது 67 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.
சென்ற ஆண்டு டிசம்பர் 1ந் தேதி வரை 136 செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர் கள், புகைப்படச் செய்தியாளர்கள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. சென்ற 2008ம் ஆண்டைவிட இந்த எண்ணிக்கை 11 அதிகம் என்று ஏஎப்பி தகவல் கூறுகிறது.
முந்திய பத்தாண்டுகளைப் போலவே, ஆக அதிகமான செய்தியாளர்களைச் சிறையில் அடைந்த நாடு சீனா. சென்ற ஆண்டு சீனாவில் 24 செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்பட்டிய லில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், கியூபா, எரிட்ரியா, மியன்மார் ஆகியவை இடம்பெற்றன.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரானில் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக் குப் பிறகு 100க்கும் மேற்பட்ட செய்தி யாளர்கள், வலைப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் ஈரானில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 65 பேருக்குமேல் இன்னமும் சிறையில் இருப்பதாகவும், ஜூன் மாதம் கைதாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு விடுதலை யான நியூஸ்வீக் இதழின் ஈரானிய-கனடிய செய்தியாளர் மசியார் பஹாரி கூறினார்.
0 comments :
Post a Comment