Wednesday, February 10, 2010

20,000 குடியேறிகளின் விண்ணப்பங்களை நிராகரித்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அரசாங்கம் குடிநுழைவு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. முடி அலங்காரம் மற்றும் சமையல் பாட வகுப்புகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் நிரந்தரவாச அந்தஸ்து பெற முயலுகின்றனர். இந்தப் போக்கைத் தடுப்பதற்காகவும் அதிக திறன்பெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்திலும் கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிவித்திருப்பதாக ஆஸ்திரேலிய குடிநுழைவுத் துறை அமைச்சர் கிறிஸ் ஐவன்ஸ் கூறினார்.

அந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்கள் 20,000 பேர் செய்திருந்த குடிநுழைவு விண்ணப்பங்களை அரசாங்கம் நிராகரித்திருப்பதாகவும் அவர்கள் செலுத்திய கட்டணங்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
ஆஸ்திரேலியாவின் இந்த புதிய விதிமுறையால் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வந்த பல மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment