16வது சார்க் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழுடன் இலங்கை வந்த பூட்டான் அமைச்சர்.
திம்புவில் எதிர்வரும் 28 - 29 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள சார்க் நாடுகளுகான 16வது உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை பூட்டான் வெளிவிவகார அமைச்சர் Mr.Lyonpo Ugen Tshering நேற்று (19) அலறி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேரில் கையளித்தார்.
மாலைதீவில் இடம்பெறவிருந்த இந்நிகழ்வு அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பூட்டானில் இடம்பெறவுள்ளது. சார்க் கமிட்டி 1985ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இம்முறையே முதல்தடவையாக பூட்டானில் உச்சிமாநாடு இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment