Sunday, February 28, 2010

அணு ஆயுத பாதுகாப்பு கூட்டம் ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது

அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட்டி இருக்கிறார். இது ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அணு ஆயுத கடத்தலை தடுப்பது போன்றவை பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். `அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதங்கள், தீவிரவாதிகளின் கையில் சிக்காமல் தவிர்க்க முடியும்' என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது: அமெரிக்கா அறிவிப்பு
ஆயுதம் தயாரிப்பதற்கான அணு உலை வேறு, மின்சார உற்பத்திக்கான அணுசக்தி நிலையம் வேறு அணு என்று 2 ஆகப்பிரித்து மின்சக்திக்கான அணுஆலை அமைப்பதற்கு உதவி செய்வது என்று அமெரிக்கா முடிவு செய்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. மின்சார உற்பத்திக்கான அணுஉலைக் கூடங்களுக்கு தேவையான யுரேனியத்தை சப்ளை செய்வது போன்ற பல உதவிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு செய்ய இருக்கிறது. இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை தங்களுடன் செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரி வருகிறது. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்து விட்டது. பாகிஸ்தான் தலைவர்களிடம் இதை அமெரிக்கா தெளிவுபடுத்தி விட்டது.


No comments:

Post a Comment