Monday, February 15, 2010

100 ஆண்டுகளாக சிங்கப்பூரில் சமணர்கள்

மிகத் தொன்மையான மதங்களில் ஒன்றான, சமணம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தழைத்து வருகிறது. கடந்த 1972ம் ஆண்டுதான் சிங்கப்பூர் சமண சமயக் கழகம் அதிகாரபூர்வ சமய மற்றும் அறநிறுவனமாகத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1978ம் ஆண்டு, யூனோஸ் வட்டாரத்தில் உள்ள 18, ஜாலான் யாசின் சாலையில் ஓர் இடத்தை வாங்கி இரண்டு மாடிக் கட்டடத்தை சமண சமயத்தார் கட்டினர். கிட்டத்தட்ட $1.5 மில்லியன் செலவில் புதுப்பிப்புப் பணிகளுடன் நவ~ன மயமாக்கப்பட்ட கட்டடத்தை மூத்த அமைச்சர் கோ சொக் டோங் நேற்று திறந்துவைத்தார்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,500 சமணர்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலும் குஜராத்தைச் சேர்ந்த இவர்களில் 80 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள். ஏனையோர் வெளிநாட்டினர்.
தொன்றுதொட்டு அறப்பணிகளில் ஈடுபட்டு வரும் சிங்கப்பூரின் சமண சமயத்தார் தற்போது ‘சன்லஃப்’ முதியோர் பராமரிப்பு அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் சமூகத்தில் மேலும் ஆக்ககரமான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

அகிம்சை, பல கருத்து பரிமாற்றம், உடைமைகள் அற்ற நிலை ஆகியவை இந்தச் சமயத்தின் முக்கிய சித்தாந்தாம். கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மதத்தைக் கடைப் பிடிப்போர் சைவ உணைவையே உண்பர்.

1 comments :

Anonymous ,  February 15, 2010 at 8:16 PM  

It's really a wonderful news to hear that "Samana" religion still exists.
Please be good enough to let us know more abut the existing Samana religion in Singapore.They can be
described as fundamentalists or con servatives,but they set a marvellous example for peace and harmony and to get get rid of our agressiveness.
Thank you.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com