முழுமையான நல்ல மனிதர் : மன்மோகனுக்கு பாராட்டு.
'பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த காலத்தின் சிறந்த அரசியல்வாதியாக கருதலாம்' என பிரிட்டனில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பிரையன் ஆப்பிள் யார்டு என்பவர் அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 'முழுமையான நல்ல மனிதர்' என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் ஆக்ஸ் போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைகளில் இருந்து கவுரவ டாக்டர் பட்டங்களை பெற்றவர். பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்இ மன்மோகன் சிங்கை சந்திக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில்இ இந்தியா உடனானஇ பிற நாடுகளின் நெருக்கம் அதிகரித்துள்ளது. இவரது ஆட்சியில் இந்தியா, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளது. பிரிட்டன் மீடியாக்கள் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் ஒபாமா அளித்த பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சியை முக்கிய நிகழ்வாக செய்தி வெளியிட்டன. இந்திரா பிரதமராக இருந்த போது எமர்ஜென்சி பிறப்பிக்கப் பட்டது மற்றும் கிழக்கு பாகிஸ்தான் போர் போன்ற காரணங்களால் பிரிட்டன் மீடியாக்கள் அவரை பற்றி கடுமையாகவே செய்தி வெளியிட்டன.
அதன் பின் பிரதமராக இருந்தவர்களில் வாஜ்பாய், அவரது கவுரவமான தனிப் பட்ட வாழ்க்கை முறைக்காக பாராட்டப் பட்டாலும், முஸ்லிம்கள் தொடர்பாக பா.ஜ.இவின் அணுகுமுறையால் விமர்சனங்கள் எழுந்தன.அதற்கு முன்இ பிரதமராக இருந்த நரசிம்மராவ், உலகமயமாக்கல் கொள்கைக்காக பாராட்டப்பட்டார். தற்போது பிரதமர் மன் மோகன் சிங்கை பாராட்டி, பிரிட்டன் பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment