Sunday, January 24, 2010

காற்று மாசு படுவதை கட்டுப்படுத்த ஐ.நா. விதிக்கும் நிபந்தனைக்கு மன்மோகன்சிங் எதிர்ப்பு

காற்றில் மாசு கலப்பதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வருகிற 31-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஐ.நா. நிபந்தனை விதித்துள்ளது. அது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் கடிதம் எழுதியுள்ளார். டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கேவும் அதை வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், அந்த நிபந்தனையை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்து விட்டார். ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் டென்மார்க் பிரதமரின் அடுத்தடுத்த நெருக்கடிகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளார். கோபன்ஹெகன் மாநாட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட கியோட்டோ மாநாட்டில் ஏற்பட்ட சட்ட ரீதியான உடன்படிக்கை குறித்து மவுனமாக இருப்பது குறித்தும் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பி இருக்கிறார்.



No comments:

Post a Comment