மேலுமோர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு முன்னாள் இராணுவத் தளபதிகளின் ஒருவரான ஹமில்டன் வனசிங்க ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹம்பகாவில் இடம்பெற்ற பொதுக்கூட்ட மேடையின் முன் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் தோன்றி அவர் தனது ஆதரவினை ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 22ம் திகதி கேகாலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சிறில் ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் இராணுவத் தளபதிகளில் இருவர் இதுவரை மேடைக்கு வந்துள்ளனர்.
0 comments :
Post a Comment