நம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்
எனது செய்தி
நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே
உங்களது தெரிவு
ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்ளது. இலஞ்ச ஊழல், கைலஞ்சம், உறவினர்களுக்கு தொழில்வாய்ப்பு, பிரபுத்துவத்தைக் காட்டும் தேவையற்ற செலவினங்கள் என்பன எமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களையும் கஷ்டப்பட வைக்கின்றன. யுத்தம் தற்சமயம் முடிவடைந்துள்ளதனால், அபிவிருத்திக்கான மூலவளங்கள் உள்ளன. ஆனால், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக ராஜபக்ஷ குடும்பத்தினர் தங்களின் முன்னேற்றத்திலேயே அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை தற்சமயம் நடுச்சந்தி நிலையிலுள்ளது.
தெரிவு ஒன்று ஜனவரி 26ஆந் திகதி உங்களுக்கு உண்டு
முன்குறிப்பிட்ட விடயங்களையே மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்த வரிகள், அதிகரித்த வாழ்க்கைச் செலவு, குறைந்த வருமானம், குறைந்தளவிலான சுகாதாரம் மற்றும் கல்வி என்பனவற்றை ஏற்படுத்தும் இலஞ்ச ஊழல், கைலஞ்சம், உறவினர்களுக்கு தொழில்வாய்ப்பு, பிரபுத்துவத்தைக் காட்டும் தேவையற்ற செலவினங்கள் என்பனவற்றை நீங்கள் தொடர்ந்தும் கொண்டிருக்கலாம்.
அல்லது நான் வாக்குறுதியளிக்கும் நம்பிக்கையான மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்கலாம். ஜனநாயகத்தை நான் மீளமைப்பேன். இலஞ்ச ஊழலை நான் ஒழிப்பேன். தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி, வருமானத்தை அதிகரித்து, வரிகளையும் வாழ்க்கைச் செலவையும் குறைப்பேன். நான் அரசியலைத் தொழிலாகக் கொண்டவனல்ல. ஆனால், நான் ஒரு அரச ஊழியன்.
இப்போது இல்லாவிட்டால் ஒருபோதுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும் பெருமளவு நன்மையைப் பெறும் உரிமை இலங்கைக்கு உண்டு. யுத்தத்தை வென்ற நாம் சமாதானத்தை இப்போது வென்றெடுக்க வேண்டும். ஜனவரி 26இல் நம்பிக்கையான மாற்றத்திற்கு சரத் பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள்.
சரத் பொன்சேகா
தற்போதைய நிலைமை
சகல வளங்களையும் கொண்ட இலங்கை, வாழ்வதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும், உலகில் சிறந்த நாடு என்பது எனது எண்ணமாகும். இருந்தபோதிலும், யுத்தம் முடிவடைந்ததும் மக்கள் எதிர்பார்த்த சமாதானம் முழு அளவில் பெற்றுக்கொள்ளப்படவில்லை. மக்களின் நம்பிக்கைகள் வீணாக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளன. ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கடினமாகியுள்ளது.
பல குடும்பங்கள் சிறந்ததொரு வாழ்க்கை நிலையையும், வாழ்க்கைத் தரத்தையும் கொண்டிருக்க முடியாமல் இருப்பது எனக்கு நன்கு தெரியும். மூன்று வேளை உணவையே பெறமுடியாத நிலையில் சில குடும்பங்கள் உள்ளன. நல்ல சம்பளத்துடனான தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளன. தற்போதுள்ள தொழில் வசதிகளும் அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது. தேர்தல் காலத்தில் உருவாக்கப்படும் ஒருசில அரசாங்க வேலைவாய்ப்புக்களும் அவர்களது ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பற்றவர்கள் மீது குறுந்தடிப் பிரயோகமும், கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் இடம்பெறுகின்றன.
விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை, செலவினத்தை ஈடு செய்யும்வகையில் விற்க முடியாமல் இருப்பதையும் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை விற்க முடியாமல் இருப்பதையும் அரச ஊழியர்கள் சாதாரண வாழ்க்கையைக்கூட வாழ முடியாமல் இருப்பதையும் ஓய்வூதியம் பெறுவோர் கஷ்டப்படுவதையும் இலட்சக்கணக்கான தனியார்துறை ஊழியர்கள் ஆகக்குறைந்த மட்டத்தில் வாழ்க்கையை நடத்துவதையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் அதிபர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை கைவிடும் நிலை
உருவாகியுள்ளதையும் நான் அறிவேன்.
குறைந்த சம்பளத்திலும் மிக மோசமான சூழலிலும் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கென இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருடா வருடம் வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சமூர்த்தி கொடுப்பனவுகளும் அரசியல் ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுகின்றன. உதவிபெறத் தகுதிபெற்றவர்கள் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எமது நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த வீரபுருஷர்கள் வாழ்வதற்கு நல்ல வீடு இன்றி
கஷ்டப்படுகின்றனர். யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்கியுள்ளனர். வலதுகுறைந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவு செல்வத்தை ஒருசிலர் திரட்டியுள்ள போதிலும், ஏனையோரின் வாழ்க்கை ராஜபக்ஷ குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் மிக மோசமாகவுள்ளது. இந்த நிலைமை ஏன் ஏற்படவேண்டும் என்று நான் உங்களைக் கேட்கின்றேன். நினைத்துப் பார்க்க முடியாத மட்டத்திலான இலஞ்ச ஊழல், கைலஞ்சம், உறவினர்களுக்கு தொழில்வாய்ப்பு, தேவையற்ற செலவினங்கள் என்பன எமது நாட்டின் அபிவிருத்திக்கும், எமது குடும்பங்களின் சுபீட்சத்திற்கும் தடையாகவுள்ளன.
இலங்கையில் இலஞ்ச ஊழலின் நிலைமையை நினைத்தாலே தலைசுற்றும். மத்திய வங்கியின் சிரேஷ்ட ஆலோசகரும் இலங்கை பொருளாதார சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் ஏ.டீ.வீ. டீ எஸ் இந்திரரத்ன, '2006 ஆம் ஆண்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 9% சதவீதம் விரையமாகியுள்ளது' என்று தெரிவிக்கின்றார். இலஞ்ச ஊழல் இல்லாதிருந்தால் இலங்கையின் வளர்ச்சி வீதம் மேலும் 2% சதவீதத்தினால் அதிகரித்திருக்கும் என்பது அவரது கருத்தாகும். சென்ற வருட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த நட்டத்தின் மதிப்பீடு 350 இல் இருந்து 400 பில்லியன் ரூபா வரையிலாகும் என அறிவிக்கப்படுகிறது. இந்தத் தொகை பாதுகாப்பு அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட செலவினத்தின் இரண்டு மடங்கு அல்லது உயர்கல்வி அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட செலவினத்தின் 15 மடங்கு எனக் கூறமுடியும்.
நிலைமை இப்படியிருக்க, உங்களது குடும்பத்தை இவை எவ்வாறு பாதிக்கின்றன என்ற வினா எழுகின்றது. இலஞ்ச ஊழல் இல்லாதிருந்தால், அரசாங்கம் மேலும் பெருமளவு வருமானத்தைச் சேகரித்து, மேலதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, முக்கியமாக வறிய மக்களுக்கும் - பொதுவாக சமூக சேவைகளிலும் பெருமளவு தொகையைச் செலவிட்டிருக்கலாம். மேலும் பல வைத்தியசாலைகளை நாம் அமைத்திருக்கலாம். சிறந்த, தரமான மருந்துகளை உபயோகித்திருக்கலாம். பாடசாலைகளில் சிறந்த வசதிகள் வழங்கப்படுவதோடு, எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் அபிவிருத்தியடையச் செய்திருக்கலாம். முக்கியமாக, இலஞ்ச ஊழல் இல்லாவிட்டால், மக்கள் நாளாந்தம் வாங்கும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான பெருமளவு வரியைக் குறைத்திருக்க முடியும். இலஞ்ச ஊழல் இல்லாவிட்டால், நல்ல சம்பளத்துடன்கூடிய இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கும் மேலதிக முதலீடுகளை நாம் செய்திருக்கலாம்.
இலஞ்ச ஊழலை அடிப்படையாகக் கொண்ட பேராசை மிக்க அரசாங்கம் ஒன்றுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார் என்பது தற்சமயம் தெளிவாகியுள்ளது. தமது குடும்ப அங்கத்தவர்கள் அதிகாரத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் ஒரு அரசாங்கத்தை மஹிந்த ராஜபக்ஷ நடத்தி வருகிறார். இலங்கை மக்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்படும் அதேசமயத்தில், ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் செல்வந்தர்களாகி உள்ளமை தெரிய வருகிறது. இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று நான் கருதுகின்றேன். அதேசமயத்தில், அடுத்துவரும் சந்ததியினரை பதவியில் அமர்த்துவது பற்றி அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாகவே, அரசியலமைப்புக்கான 17ஆவது திருத்தம் நடைமுறைக்கிடப்படவில்லை என்று நான் கருதுகின்றேன். சுதந்திரமான ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படாமைக்கும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு செயலற்றிருப்பதற்கும் ஊடகங்கள் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் - அமைதிகாப்பதற்கும் இதுவே காரணமாகும்.
இலஞ்ச ஊழல் இலங்கை மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. எனவே, நாம் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். இல்லாவிட்டால், எமது பிள்ளைகளே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
யுத்தம் தற்சமயம் முடிவடைந்துள்ளதனால், அபிவிருத்திக்கான மூலவளங்கள் பெருமளவு உள்ளன. இலங்கை தற்சமயம் நடுச்சந்திக்கு வந்துள்ளது. ஆனால், எமது மக்களுக்கு உதவக்கூடிய மார்க்கத்தில் செல்வதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் தயாராக இல்லை.
இலஞ்ச ஊழலற்ற சூழலில் மக்களுக்கு சேவையாற்றவேன அரசதுறையும், தனியார்துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொருளாதாரம் ஒன்று அவசியமென நான் கருதுகின்றேன். இதற்கென சரியான சட்ட அமைப்புக்கள் இருப்பதோடு, தொழிலாளர்களினதும் தொழில் அதிபர்களினதும், உரிமைகளும் கடமைகளும் பாதுகாக்கப்படும் நிலைமை
நிச்சயிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். சென்ற வருடம் உலக நாடுகள் எதிர்நோக்கி இருந்த பொருளாதாரப் பின்னடைவை உதாரணமாகக் கொண்டு, எமது பொருளாதார முகாமைத்துவத்தை நாம் தயாரிக்க வேண்டும். எதிர்காலத்தில் தவறுகள் அழைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கென எமது நாட்டின் முன்னைய அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்தும் நாம் பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவசியமான சீர்திருத்தங்களை நாம் மேற்கொள்வதோடு,
நடைமுறை ரீதியிலான அணுகுமுறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
நாட்டின் மூலவளங்களை உபயோகித்து பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் தருணம் இதுவென்று நான் கருதுகின்றேன். எமது நாட்டில் வாழும் 20 மில்லியன் மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக நாடுகளில் வாழும் மக்களுக்கும் பொருட்களையும், சேவைகளையும் வழங்கும் விதத்தில் கிராம மட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய செல்வம் ஒருசில மக்கள் மத்தியில் அல்லாமல், நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமாக விநியோகிக்கப்படுவதை
நாம் நிச்சயிக்க வேண்டும்.
இதனை அடைவதற்கு இலங்கையில் பாரியளவிலான மாற்றம் தேவை என
நான் பிரகடனம் செய்கின்றேன். நம்பிக்கையான மாற்றமே இலங்கைக்குத்
தேவை.
எனது தொலைநோக்கு
நான் வித்தியாசமானவன். நான் மாற்றத்தை விரும்புபவன். நம்பிக்கையான மாற்றத்தை நான் நிச்சயம் ஏற்படுத்துவேன்.
40 வருடகால இராணுவ சேவை அனுபவத்தைக் கொண்ட நான் அரசியலை தொழிலாகக் கொண்டிருக்கவில்லை. கஷ்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு நான் பயப்பட மாட்டேன். முந்தியகால எனது தீர்மானங்களைக் போல எதிர்காலத்தில் நான் எடுக்கும் தீர்மானங்களும் நாட்டின் நன்மை கருதியே அமைந்திருக்கும். எனது வாக்குறுதிகளை நான் நிறைவேற்றியுள்ளேன். இராணுவத்திற்கு நான் தலைமைதாங்கிய சமயம், நான் மேற்கொண்ட சகல பதவி உயர்வுகளும் சேவை மூப்பின் அடிப்படையில் அல்ல, அதிக எண்ணிக்கையான பதவி உயர்வுகள் தகைமை அடிப்படையிலேயே இடம்பெற்றன. இதேபோல, எதிர்காலத்திலும் பொருத்தமானவர்களுக்கே தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும்.
சுதந்திரமான இலங்கை என்பதே எனது தொலைநோக்காகும். ஜனநாயக வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதும், இலஞ்ச ஊழல் அற்றதுமான இலங்கையையே நான் உருவாக்க விரும்புகின்றேன். ஏற்றத்தாழ்வற்ற சகலருக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்கும் இலங்கையை அமைப்பதும் இன மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் அடிப்படையிலான பலமான அடையாளத்தை உருவாக்குவதும் எனது நோக்கமாகும்.
ஜனநாயகம் மீளமைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வழிமுறை ஒழிக்கப்படும். இலங்கை உருவாக்கப்படும். பாராளுமன்ற அங்கத்தவர் பதவிக்கு சிறந்த ஆண்களும் பெண்களுமே போட்டியிடுவார்கள். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உயர்தர மனிதப் பண்பாட்டைக் கொண்டிருப்பார்கள். ஊடகங்களுக்கு சுதந்திரமும், மக்களுக்கு தகவலை அறியும் உரிமையும் வழங்கப்படும். வெள்ளை வான் கலாசாரம் ஒழிக்கப்பட்டு சட்டவிரோத படுகொலைகள் கடந்த கால நிகழ்ச்சிகளாக கருதப்படும். சகல மக்களினதும்
மனிதாபிமான மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.
மூன்று வேளை உணவை மகிழ்ச்சியுடன் பெறும் குடும்பங்களையே இலங்கை கொண்டிருக்கும்.
பாதுகாப்பான சுகாதார சேவை, தரம் வாய்ந்த பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வி, இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படல் என்பன உள்ள இலங்கையை உருவாக்குவதே எனது தொலைநோக்காகும்.
ஒவ்வொரு விவசாயப் பெருமகனின் குடும்பமும் கௌரவத்துடன் வாழும் இலங்கை உருவாக்கப்படும். நெற் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள், அரிசி ஆலை ஏதேச்சாதிகாரத்தில் இருந்து விடுபட்டு, சந்தை அடிப்படையிலான உத்தரவாத விலையை பெறுவார்கள்.
சமுதாயத்திற்கு தாங்கள் வழங்கும் பங்களிப்பையிட்டு பெருமையடையும் மீனவ சமூகத்தைக் கொண்ட இலங்கை.
அரசாங்க ஊழியர்களும், தனியார்துறை ஊழியர்களும் சிறந்த வருமானத்தைப் பெறுவதும், மதிப்புவாய்ந்த எமது முதியோர்கள் தங்களது ஓய்வுக்காலத்தில் சமூக மற்றும் நிதித்துறைப் பாதுகாப்பைப் பெறுவதுமான இலங்கை.
சிறிய மற்றும் நடுதத்ர அளவிலான வர்த்தகஙக்ள வளாச்சியடைநது தரமான எமது ஏற்றுமதிகள் உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் இலங்கை.
கப்பம்கோரும் அரசியல்வாதிகளின் தலையீடற்ற விதத்தில் தொழில் அதிபர்கள் தங்களது நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் இலங்கை.
தகவலும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் பெருமளவு கிடைப்பதனால், நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள ஆண்களும், பெண்களும் சிறந்த தரம் வாய்ந்த சேவைகளை வழங்கும் இலங்கை.
வெளிநாடுகளில் தங்களது குடும்ப அங்கத்தவர்கள் தொழிற்திறன்மிக்க வேலைகளைப் புரிவதோடு, அவர்கள் நாடு திரும்பியதும் சொந்த முறையில் தொழிலை ஆரம்பிக்க உதவும் இலங்கை
எமது நாட்டை ஒருங்கிணைப்பதற்கென யுத்தத்தை நடத்திய சகலரினதும் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் இலங்கை இராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் சேவையாற்றும் சகல மக்களும் பெருமையுடன் வாழும் இலங்கை
பொலிஸ் சேவையும் சிவில் பாதுகாப்புச் சேவையும் கௌரவத்துடன் செயற்படுவதும், பொலிஸ் அதிகாரிகள் கௌரவத்துடன் நடத்தப்படுவதுமான இலங்கை
நாட்டிற்கென அதியுயர் அர்ப்பணத்தைச் செய்தவர்களின் குடும்பங்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்படுவதோடு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும், சகல வசதிகளையும் வழங்கும் இலங்கை
உண்மையில் வறியவர்கள் உரிய உதவியைப் பெற்று வறுமையில் இருந்து நீங்குவதற்கு உதவுவதும், பலதரப்பட்ட வகையில் வலதுகுறைந்தவர்களுக்கு எம்மைப்போன்ற சமசந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதும் தொழில்வாய்ப்பற்றவர்கள் தொழில் வசதியைப் பெறவும் அத்தகைய இடைவேளையில் அந்தக் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படுவதை நிச்சயிப்பதுமான இலங்கை
இடம்பெயர்ந்த மக்கள் என்ற பிரிவினர் அற்ற இலங்கையை உருவாக்குவதே எனது
தொலைநோக்காகும்.
இந்தத் தொலைநோக்கை அடைவதற்கு திட்டம் ஒன்றையும் நடவடிக்கைக்கான கால
அட்டவணையையும் நான் தயாரித்துள்ளேன். நீதியான மற்றும் ஒழுக்காற்று அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்கும் திட்டம் ஜனநாயகத்தை மீளமைத்து இலஞ்ச ஊழலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வாழ்க்கைச் செலவைக் குறைத்து தொழில் வாய்ப்புக்களையும் வருமானத்தையும் அதிகரித்து, சகலருக்கும் சமசந்தர்ப்பத்தை உருவாக்கும் திட்டம். இவற்றை அடைவதற்கு எனது அரசாங்கம் உச்சக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கீழ்காணும் விஷயங்கள் சம்பந்தமாக நான் வாக்குறுதி அளிக்கின்றேன்
1. ஜனநாயகத்தை மீளமைத்து சமாதானத்தை வென்றெடுப்பேன்.
2. மோசடிகளையும் இலஞ்ச ஊழலையும் நான் ஒழிப்பேன்.
3. குடும்பத்தினர் போதிய நிதி வளம் கொண்டிருக்க நான் உதவுவேன்.
4. வாழ்க்கைச் செலவை நான் குறைப்பேன்.
5. தேசிய ஒருங்கிணைப்புக்கான வழிமுறைகளை நான் ஆரம்பிப்பேன்.
6. சுகாதார சேவைகளையும் சிறந்த கல்வியையும் நான் மீளமைப்பேன்.
7. பெண்களுக்கான உரிமைகளை நான் வழங்குவேன்.
8. இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை நான் வழங்குவேன்
9. நீதியும் ஒழுக்காற்றலும் கொண்ட சமுதாயத்திற்கான அடிக்கல்லை நான் நாட்டுவேன்
10. நாட்டின் பந்தோபஸ்தை நான் பாதுகாப்பேன்
கீழ்க்காணும் விஷயங்கள் சம்பந்தமாக நான் வாக்குறுதியளிக்கின்றேன்
1. ஜனநாயகத்தை மீளமைத்து சமாதானத்தை வென்றெடுப்பேன்
சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை
ஒழிப்பதன் மூலம் ஜனநாயகத்தை மீளமைப்பதே நாம் எதிர்நோக்கும் சவாலாகும். ஜனாதிபதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், எனது முதலாவது நடவடிக்கை, சுதந்திரமான ஆணைக்குழுக்களை மீள உருவாக்குவதற்கு வழிவகுக்கும் அரசியல் யாப்பு சபையை நியமிப்பதன் மூலம் அரசியல் யாப்புக்கான 17ஆவது திருத்தத்தை மீளச் செயற்படுத்துதலாகும்.
இதனையடுத்து, உலகிலேயே மிகப் பாரிய அளவிலான அமைச்சரவையைக் கலைத்து
பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் சகல கட்சிகளையும் எனது காபந்து அமைச்சரவைக்கு அங்கத்தவர்களை நியமிக்கும்படி அழைப்பு விடுப்பேன். இதனையடுத்து, பாராளுமன்றம் கலைக்கப்படும். அவசரகாலச் சட்டங்களைத் திருத்துவதற்கான துரித அமைச்சரவைப் பத்திரங்கள் கொண்டுவரப்படும். ஒரு மாதகாலத்தினுள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வழிமுறையை ஒழித்தலுக்கான அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலம் பத்திரிகைகள் கவுன்சிலை ஒழிப்பதற்கான சட்டமூலம், தகவல் சுதந்திர சட்டமூலம் என்பன சமர்ப்பிக்கப்படும்.
எனது காபந்து அமைச்சரவையின் கீழ் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்கள் நடைபெறுவதை நிச்சயிக்க தேவையான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். புதிய
சட்டமூலங்கள், புதிய பாராளுமன்றத்திற்கு ஒரு மாதகாலத்தினுள் சமர்ப்பிக்கப்படும் என நான்
எதிர்பார்க்கின்றேன்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்த பின்னர், பாராளுமன்றத்தின்
ஆதரவுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் ஜனாதிபதி என்ற நிலையில் தொடர்ந்து
பணியாற்றுவேன்.
2. மோசடிகளையும் இலஞ்ச ஊழலையும் நான் ஒழிப்பேன்
இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு அமைய மோசடிகளையும், இலஞ்ச
ஊழலையும் ஒழிப்பதற்கு எனது பலகட்சி காபந்து அமைச்சரவை மூன்று வாரகாலத்தினுள் புதிய சட்டங்களைக் கொண்டுவரும். குற்றவாளிகள் எனக் காணப்படுவோரின் சட்டபூர்வமற்ற முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சகல சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். மோசடிகளுக்கும், இலஞ்ச ஊழல்களுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கென புதிய சக்திவாய்ந்த அமைப்பொன்று உருவாக்கப்படும்.
சகல அரச நிறுவனங்களின் நிதிவளங்களை கணக்காய்வு செய்வதற்கென சுதந்திரமான
ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவதோடு, அரச நிறுவனங்களின் நிதித்துறையை கணக்காய்வு செய்வதில் ஏற்படும் சகல தடைகளையும் நீக்குவதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்வேன்.
அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள ஜனநாயகத்தைப் போன்ற மனிதப்பண்பாடு சம்பந்தமான
பாராளுமன்ற ஏற்பாடுகளை அங்கீகரிக்கும்படி புதிய பாராளுமன்றத்தை நான் கேட்டுக்கொள்வேன்.
நிதித்துறை சம்பந்தமான பாராளுமன்ற பண்பாடுகளை நிலைநாட்டுவதற்கென சுதந்திரமான
பாராளுமன்ற பண்பாட்டு ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். வருடாந்த அடிப்படையில்
எனது சொத்துக்களினதும், பொறுப்புக்களினதும் விபரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படும்.
3. குடும்பத்தினர் போதிய நிதி வளம் கொண்டிருக்க நான் உதவுவேன்
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 /- வினால் நான் அதிகரிப்பதோடு, ஓய்வூதிய முரண்பாடுகளுக்கும் தீர்வுகள் காண்பேன். ஆகக்குறைந்த சமூர்த்தி கொடுப்பனவு 500 ரூபாவாக இருக்கும் அதேசமயத்தில், அரசியல் ரீதியில் தவிர்க்கப்பட்ட ஆனால், உதவிபெறத்
தகைமையுள்ள சகல குடும்பத்தினரையும் இந்த சமூகப் பாதுகாப்பு அமைப்பினுள் கொண்டுவருவேன். சமூர்த்தி அதிகாரிகளின் குறைபாடுகளுக்கும் தீர்வுகள் காணப்படும்.
நல்ல தரம் வாய்ந்த சகல இன உர வகைகளும் மானிய அடிப்படையில் சந்தையில் விற்கப்படுவதை நான் நிச்சயிப்பேன். அரிசி ஆலை ஏதேச்சாதிகாரம் ஒழிக்கப்படுவது நிச்சயிக்கப்படுவதோடு, சந்தை அடிப்படையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படுவதையும் நான் நிச்சயிப்பேன். இந்த வருட பெரும்போக அறுவடையில் சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கு 40/- ரூபாவாகவும், நாட்டரிசி 35/- ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படுவதை நான் நிச்சயிப்பேன். இதன் அடிப்படையில் சந்தையில் விவசாயிக்கு அதிகரித்த விலை கிடைக்கும். பாற்பண்ணையாளர்கள் ஒரு லீற்றர் பாலுக்கு ஆகக்குறைந்த விலையாக 45ஃ- ரூபாவைப் பெறுவதை நான் நிச்சயிப்பேன். உயிர்ப்பொருள் விவசாயத்திற்கு நான் ஆதரவளிப்பேன்.
வர்த்தக நடவடிக்கைகளின் செலவினங்களை அதிகரிக்கும் அனாவசிய வரிகள் மற்றும்
கொடுப்பனவுகள் என்பனவற்றை ஒழிப்பதற்கு உதவுவதன் மூலம் தனியார்துறை ஊழியர்களின்
சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதற்கு அந்தத்துறையினருடன் நான் பேச்சுக்களை நடத்துவேன்.
300,000 வேலைவாய்ப்புக்களை பாதுகாக்கவென GSP சலுகைகள் மீளப் பெறப்படுவதை நான்
நிச்சயிப்பேன். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகத்துறையினரின் பிரச்சினைகளை
ஆராயவென உயர்மட்ட குழுவொன்றை நான் நியமிப்பேன். தோட்டத் தொழிலாளர்களின்
சம்பளங்களை 500/- ரூபாவாக அதிகரிப்பதற்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதோடு, அவர்களது
வாழ்க்கை நிலையை மேம்படச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் நான் ஆரம்பிப்பேன்.
மத்திய வங்கியின் செயலற்ற தன்மை காரணமாக நிதி மோசடிக்கு உட்பட்டிருக்கும் குடும்பங்கள் இயன்றளவு உச்சக்கட்ட நிலையில் நஷ்டஈடு பெறுவதை நான் நிச்சயிப்பேன். விவசாய ஓய்வூதியம் அதிகரிக்கப்படுவதோடு, கடற்றொழில் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். உத்தியோகப்பற்றற்ற முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கென
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவற்றுக்கு மேலதிகமாக புத்தாண்டுப் பண்டிகைக்கான சகல பாவனைப்பொருட்களும் நியாய விலையில் தாராளமாக கிடைப்பதை நான் நிச்சயிப்பதோடு, சகல பண்டிகை முற்பணங்களும் உரிய காலத்தில் வழங்கப்படுவதையும் நிச்சயிப்பேன்.
4. வாழ்க்கைச் செலவை நான் குறைப்பேன்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான பெருமளவு வரிகளை குறைப்பதன் மூலம் உணவுப்
பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றத்
தீர்ப்புக்கு அமைய பெற்றோலின் விலையையும் நான் குறைப்பேன்.
தேவைக்கு ஏற்ற வகையில் சமையல் எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள்
மீதான வரிகளை கணிசமான அளவு நான் குறைப்பேன். பாடசாலைச் சேவையில் ஈடுபடும்
வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் என்பனவற்றின் சூழலை அசுத்தமாக்காத சான்றிதழுக்கான
கொடுப்பனவை நீக்குவதன் மூலம் போக்குவரத்துச் செலவினத்தை மேலும் நான் குறைப்பேன்.
தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப்பாகங்கள் சலுகைத் தீர்வை
அடிப்படையில் வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
5. தேசிய ஒருங்கிணைப்புக்கான வழிமுறைகளை நான் ஆரம்பிப்பேன்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நான் உதவுவேன். யுத்தத்தனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குமான நிவாரண
நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கிடப்படும். தமிழ் பேசும் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்படும். எஞ்சியுள்ள சகல இடம்பெயர்ந்த மக்களும்
உடனடியாக மீள் குடியேற்றப்பட்டு, அதற்கான கொடுப்பனவு ஒரு குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது 100,000/- ரூபாவாக அதிகரிக்கப்படுவதோடு, தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.
முதலாம் மாதம் முடிவடைய முன்னரே யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, எத்தகைய தாமதமும் இன்றி அவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை நான் நிச்சயிப்பேன். பயங்கரவாதம் காரணமாக தடுத்து
வைக்கப்பட்டவர்கள் சம்பந்தமாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதோடு,
அவர்களுக்கு புனர்வாழ்வோ அல்லது விடுதலையோ வழங்கப்படுவது நிச்சயிக்கப்படும். இன,
மத, கலாசார பன்முகத்தன்மையின் அடிப்படையிலான இலங்கை மக்கள் என்ற அடையாளத்தை மேம்படுத்தி, அதனை வளர்ப்பேன். கடவுள் வழிபாட்டுக்கான சுதந்திரம் எத்தகைய தடையோ அல்லது வேறுபாடுகளோ இன்றி இடம்பெறுவதை நான் நிச்சயிப்பேன்.
6. சுகாதார சேவைகளையும் சிறந்த கல்வியையும் நான் மீளமைப்பேன்
முதலாம் மாதம் முடிவடைய முன்னர் சுகாதாரத்துறை சம்பந்தமாக நெருக்கடி நிலை
ஏற்பட்டுள்ளதென நான் பிரகடனம் செய்வதோடு, தரக்குறைவான மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தி, சகல அரச வைத்தியசாலைகளிலும் சிறந்த தரம்வாய்ந்த மருந்து வகைகள் கிடைப்பதை நிச்சயிப்பேன். தொற்று நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் என்னால் நிச்சயிக்கப்படும்.
கல்வி வழிமுறைகள் சம்பந்தப்பட்டமட்டில், முதலாவது மாதத்திலேயே நம்பிக்கையை
மீள ஏற்படுத்துவேன். நம்பகமான பரீட்சை வழிமுறை உருவாக்கப்படுவதற்கும், 2011
ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்த்தல் தொடர்பாகவும் சம
அடிப்படையிலான வழிமுறை ஏற்படுத்தப்படுவதற்குமென துரித நடவடிக்கைக்குழுக்கள்
நியமிக்கப்படும். நகரங்களிலும், கிராமப்புறங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கு
இடையிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பட்டதாரி மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, தேவைப்படும் சகல
பட்டதாரி மாணவர்களுக்கும் தங்குமிட வசதி வழங்கப்படும்.
7. பெண்களுக்கான உரிமைகளை நான் வழங்குவேன்
இரண்டாம் மாதம் முடிவடைய முன்னர், நாளாந்தம் பெண்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, பெண்களின் உரிமைகள் சட்டத்தையும் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வேன். பெண்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை நிச்சயிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான திட்டம் ஒன்றும் வகுக்கப்படுவதற்கென துரித நடவடிக்கைக்குழு நியமிக்கப்படும். பெண்களுக்கு சிறியளவிலான கடன் வசதிகளை வழங்கவென மகளிர் வங்கி ஒன்றும் திறக்கப்படும்.
வெளிநாடுகளில் அனாதரவாகவுள்ள இலங்கை பெண்கள் அனைவரையும் மீண்டும் இங்கு
அழைத்துவர உடனடி நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். வெளிநாடுகளில்
வேலைவாய்ப்புப் பெற்றவர்களினதும், வேலைவாய்ப்புக்களைப் பெற விரும்புபவர்களினதும்
சம்பளத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதோடு அவர்களது பாதுகாப்பும்
நிச்சயிக்கப்படும். வெளிநாடுகளில் தொழில் செய்யும் பெண்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
8. இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை நான் வழங்குவேன்
மூன்று மாதகாலத்தினுள் இளைஞர்களுக்கான சவால்கள் திட்டத்தை ஆரம்பிப்பேன். இதன்மூலம் 17 வயதுக்கும், 25 வயதுக்கும் உட்பட்ட இளைஞர்கள் நாட்டிற்குச்
சேவையாற்றுவதோடு, தங்களது வாழ்க்கையையும் மேம்படச் செய்ய முடியும். இவர்கள்
கணனி மென்கலன், ஐஊவு சேவைகள், ஆங்கிலம் உட்பட சகல தொழில்துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும் போது மாதாந்தம் 2,000 /- ரூபாவை பெறுவார்கள்.
இளைஞர்களுக்கான சவால்கள் திட்டத்தைப் பூர்த்தி செய்யும் இளைஞர்களுக்கு அரச
மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கென இளைஞர்களுக்கான
வேலைவாய்ப்புத் திட்டத்தையும் நான் ஆரம்பிப்பேன். சமயப் பாடசாலை ஆசிரியர்களும்
இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வேலையற்ற
பட்டதாரிக்கு மாதம் ஒன்றுக்கு மேலதிகமாக 3,000/- ரூபா வழங்கப்படும்.
நம்ப்பிக்கையான மாற்ற்றம்
10. நீதியும் ஒழுக்காற்றலும் கொண்ட சமுதாயத்திற்கான அடிக்கல்லை நான் நாட்டுவேன்
மனிதப் பண்பாட்டு மற்றும் தார்மீக பெறுமானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்வேன். சுதந்திரமான நீதித்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு தடையாகவுள்ள சகல தடைகளும் நீக்கப்படுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சகல மக்களுக்கும் சமத்துவ உரிமையளிக்கும் வகையில் சட்டத்தை நிலைநாட்டும் கௌரவம் மிக்க பொலிஸ் சேவையை நான் மீண்டும் ஆரம்பிப்பேன். அவர்களது அர்ப்பணித்த சேவை அங்கீகரிக்கப்படுவதோடு, 22 வருட காலம் சேவையாற்றியவர்கள் விரும்பினால் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பாதாள உலக காடையர்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வோரையும்
ஒழித்துக்கட்டுவதற்கு உடனடி நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். எத்தகைய
குற்றச்செயல்களும் அனுமதிக்கப்படமாட்டா. அநீதியான முறையில் படுகொலை செய்யப்படுவதும், ஆட்கள் காணாமல் போவதும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு,
சட்டத்தின் ஆட்சி மீண்டும் கொண்டுவரப்படும்.
10. நாட்டின் பந்தோபஸ்தை நான் பாதுகாப்பேன்
எமது அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்நோக்கும் வகையில் ஆயுதப்படையினரை நான் நவீனமயப்படுத்துவேன். ஆயுதப்படையினரதும், சிவில் பாதுகாப்புப் படையினரதும் குடும்பத்தினரது உயர்தர வாழ்க்கை நிலையை நிச்சயிப்பதற்கென பொருத்தமான நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்படும்.
துரதிர்ஷ்டவசமாக வலதுகுறைந்த இராணுவ வீரர்கள் அனைவரினதும் நலன்கள் நிச்சயிக்கப்படும். 'எமக்காக நாம்' திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட பொதுமக்களின் நிதி
துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதோடு, அந்த நிதி இராணுவத்தினரின் நலன்புரி
திட்டங்களில் செலவிடப்படுவதை நான் நிச்சயிப்பேன். நாட்டுக்கென தங்களது உயிரை
அர்ப்பணம் செய்த வீரர்களை எப்போதும் நான் நினைவுகூருவதோடு, அவர்களின்
குடும்பத்தினரின் நலன்கள் நிச்சயிக்கப்படுவதற்கு வழிவகுப்பேன்.
எமது தேசிய இலட்சியங்களை அடைவதற்கென நாட்டிலுள்ள சகல நாடுகளுடனும்
நெருங்கிய உறவுகள் தொடர்ந்து நிலைநாட்டப்படுவதை நான் நிச்சயிப்பேன்.
உங்களது தெரிவு
ஜனவரி 26ஆந் திகதி தெரிவொன்று உங்களுக்குண்டு
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியையோ அல்லது ஆட்சியின் பலன்களையோ அல்லது அதிலும் பார்க்க கூடிய விடயங்களையோ நீங்கள் தெரிவுசெய்யலாம். மேலதிக இலஞ்ச ஊழல், மேலதிக கைலஞ்சம், மேலதிக உறவினர்களுக்கு தொழில்வாய்ப்பு என்பனவற்றை நீங்கள் தெரிவு செய்தால் உங்களதும் உங்களது குடும்பத்தினதும் வாழ்க்கை மிகவும் கஷ்டமாகிவிடும்.
அல்லது இலங்கையின் மேம்பாட்டிற்கென நான் வாக்குறுதியளிக்கும் நம்பிக்கையான
மாற்றங்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கலாம்.
இந்த மாற்றத்திற்கு நான் தலைமைதாங்குவேன்.
இப்போதில்லாவிட்டால் இனிமேல் ஒருபோதும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
சரத் பொன்சேகா
0 comments :
Post a Comment