Wednesday, January 6, 2010

சி.ஐ.ஏ. மீது தாக்குதல் நடத்தியவர் ஜோர்டானை சேர்ந்த டாக்டர்: அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள சி.ஐ.ஏ. முகாம் திறப்பு விழாவில் தற்கொலை தீவிரவாதி ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 7 அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகள் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தியது ஜோர்டானை சேர்ந்த டாக்டர் என்பது தெரியவந்தது. இவரை சி.ஐ.ஏ.யும், ஜோர்டான் உளவு நிறுவனமும் தங்கள் ஏஜெண்டுகளாக வைத்து இருந்தனர். ஆனால் இவரை அல்கொய்தா தலைவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக சி.ஐ.ஏ. அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இவர் சி.ஐ.ஏ.க்கு தெரியாமல் அல்கொய்தாவுக்காக வேலை செய்து வந்து இருக்கிறார். அதன் ஏஜெண்டாகவும் வேலை செய்து வந்தார். இவர் பெயர் ஹூமாம் கலீல் அபு முலாய் அல் பாலாவி (வயது 36). இவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக சி.ஐ.ஏ அதிகாரிகளை ஏமாற்றி வந்து இருக்கிறார்.


No comments:

Post a Comment