Monday, January 11, 2010

சொன்னதைச் செய்வேன், செய்ததைச் சொல்வேன் (வேலணை கந்தன்)

ஜனாதிபதி ராஜபக்ஸ்ச யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோலாகலமான வரவேற்போடு தேர்தற் பிரச்சாரம் செய்துள்ளார். அதிலே தான் 'சென்னதைச் செய்வேன் செய்ததைச் சொல்வேன்' என்று தமிழ் மொழியின் மெட்டு பிறழாமல் சொல்லி சத்தியம் பண்ணியுள்ளார்.

இந்த ஈரடிப் பாமாலையை ரஜனிகாந்திடம் கபான செய்து தினந்தோறும் இதயவீணை
வானொலி சுரதி தவறாமல் பாராயணம் செய்தது. அதை ராயபக்ஸ்சவும் பாடமாக்கிக் கொண்டார். ராஜபக்ஸ்ச அதைச் சொல்லத்தொடங்கியவுடன் இதயவீணை அதைச் சொல்வதை நிறுத்திவிட்டது. அதை மாத்திரம் நிறுத்தவில்லை. அதன் மத்தியிற் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, எக்காலத்திலும் பிரிக்காத வடகீழ்மாகாண இணைப்பாட்சி என்பதையும் விட்டுவிட்டது.

ராஜபக்ஸ்ச சொன்னது.
1. தான் ஜனாதிபதியாகவந்தால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவேன் என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜே.வி.பி யோடு கைச்சாத்துமிட்டார். அந்தச் சொன்ன சொல்லைக் காப்பாற்றிய நன்றிக்காக இன்று ஜேவிபி சரத்பொன்சேகாவை ஜனாதிபதிவேட்பாளராகப் பரிசளித்துள்ளது.

ராஜபக்ஸ்ச சொன்னது.
2. ஜனாதிபதியாக வந்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு தன்னிடம் ஒன்றுமில்லை. இப்பொழுது சர்வகட்சி மாகாநாட்டின் தீர்வை நான் தமிழ் மக்களுக்கு வழங்குவேன். இதை அவர் கியூபாவில் நடந்த அணிசேராமகாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தனிப்படட் முறையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் என்னும் எத்கையோ கூட்டங்களிலும் திருப்பித்திருப்பிச் சொன்னவராகும். இதைச் செய்ததற்காக தமிழ் மக்களும் உலகத் தலைவர்களும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ராஜபக்ஸ்ச சொன்னது.
3. வன்னியுத்தம் உக்கிரமடைந்துகொண்டிருக்கும் தறுவாயில் பல உலக நாடுகளும் இந்தியாவும் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றை வைக்கும்படி மீண்டும் மீண்டும் கேட்டிருந்தபோது , புலிப்பயங்காரவாதம் ஒழிந்த மறுகணமே தமிழ் மக்களுக்கான தீர்வை வைப்பேன் எற்றிருந்தார் ராஜபக்ச மாத்தயா. போன மே 18 இல் பிரபாகரனும் அவரது தானைத்தலைவர்களும் வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடைந்த பின்பு வன்னி அகதிகளை அடைத்துவைத்து தமிழ் மக்கள் கண்ணீர் வடித்து ஏங்கிக் கொண்டிருந்த பொழுது யுத்தத்தை வென்ற மமதையோடு சரத்பொன்சேகா அரசியற் சவாலாக வரும் வரைக்கும் யுத்தக் களிப்போடு இறுமாந்து கிறங்கி இருந்தது மாத்திரமல்ல இலங்கையில் தேசியப் பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்று அடுத்த தாளம் போடத் தொடங்கினார்.

இந்தச் சொன்னசொல்லைக் காப்பாற்றிய சத்தியந்தவறாத உத்தமனான ராஜபக்ஸ்ச மகாத்மயாவின் மற்றய கூற்றுக்களை எழுதவெளிக்கிட்டால் புலம்பெயர்தேசங்களிலே மஹிந்த மாத்தயா வெல்வார் அவருடன் இணைந்துதிருக்கும் தமது திருடர் கூட்டத்தினூடாக தமக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளாலம் என காத்திருக்கும் புலம் பெயர் புத்திஜீவிகளின் வயிற்றில் புளிகரைக்கும்.

இங்கு மஹிந்தா தோற்றால் மகிந்தவின் சதோதரர்கள் புதல்வர்கள் குடும்பம் பதறுமோ இல்லையோ பதறப்போவது, புலம்பெயர் புத்திஜீவிக(ளாம்)ள் என புலம்பெயர்ந்துவாழும் சுயநலப்பிரியர்களே. வன்னியிலே யுத்தம் முடிவடைந்து கையுடன் மக்கள் பட்ட துயரங்களை பார்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இங்குவந்த நாட்டப்பற்று தேசப்பற்று இனபற்று கொண்ட புத்திஜீவிகள் எனப்பட்டோர், மக்களை பார்வையிட்டார்களா இல்லை என்பது தெரியாது , மக்களுக்கு தங்கள் பணத்தில் இலங்கைப்பணத்தில் 100 ரூபாவிற்று அழுக்கு தோய்த்து குளிக்க சவர்காரக்கட்டி வாங்கி கொடுத்தர்களா என்பது தெரியாது, ஆனால் வன்னியில் உள்ள நிலங்களைப் பார்வையிட்டு பரப்பு கணக்கில் அல்ல ஏக்கர் கணக்கில் அரசிடம் நிலம் கேட்டுள்ளனர். அதுவும் விலைக்கு அல்ல தாம் புலம் பெயர் தேசத்தில் புலி எதிர்ப்பு செய்தாங்களாம் அதற்கு கைமாறாக 100 ஏக்கர் காணி வேண்டுமாம் , காணிகள் கோழிப்பண்னை போடுவதற்காகவாம். அதுவும் இப்போது அல்ல நீங்கள் ஆறதலாக எந்த அவசரமும் இல்லாமல் மிவவும் ஆறதால மக்களை குடியேற்றுங்கள் , நாமும் மக்கள் முகாமில் இருக்கின்றார்கள் எனக்கூறி நாமிருக்கும் நாடுகளில் ஏதாவது சுரண்டி கோழிப்பண்ணைக்கு முதல் சேர்த்து போட்டுவிடுவோம். இதோட நிப்பாட்டுறன் இல்லாட்டி மக்களைப் பார்க்கப்போறன் என பம்பலப்பிட்டி கடற்கரையில் குளித்து கும்மாளம் அடித்த சம்பவங்கள் , யார்வாகனம் , அதுக்கு யார் பெற்றோலுக்கு காசி கொடுக்கிற , என்னத்துக்கு கொடுக்கிற பல கக்கவேண்டி வரும் நிப்பாட்டிறன். இப்படியான அநியாயத்துக்காகத்தான் பாருக்கோ மகாஜனங்கள் தீர்ப்பு ஒன்று வழங்கப்போவுது. புலம்பெயர் புலிப்பினாமிகளை விஞ்சின புலி எதிர்பு பினாமிகளுக்கு கிறுகிறுக்கிறத்துக்கு.

'சத்தியம் தவறாத உத்தமன்போலவே நடிக்கிறாய்

சமயம்பார்த்து பலவகையினில் கொள்ளை அடிக்கிறாய்...'


என்றபாடலை வானொலி நடாத்துபவர்கள் போட்டு தமிழ்மக்களின் துன்பத்தைத் தணித்தால் தமிழ் மக்களின் பெருமூச்சு கொஞ்சம் குறையும்.



No comments:

Post a Comment