நாம் முகாம்களை மூட விடும்புகின்றோம் மக்கள் வெளியேறுகின்றார்கள் இல்லை. ஜனாதிபதி.
வடக்கின் அபிவிருத்திக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும்.
இலங்கை அரசாங்கம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பைத்தளமாக கொண்டுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எமக்கு ஜப்பான் , இந்தியா , சீனா , சவுதி அரேபியா போன்ற நாடுகளிடமிருந்தும் மற்றும் உலகவங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஸ்தாபனங்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றைக்கொண்டே வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம். மின்சாரம், வீதி அபிவிருத்தி புகையிரத பாதைகளை மீழ் செப்பனிடல் போன்றவை முக்கியமான விடயங்களாக அமையவுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக இடம்பெயர்ந்துள்ள மக்களை மீழ் குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம், நாம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் குடியமர்ததுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்ன நம்பிக்கை உண்டு.
மேலும் நாம் முகாம்களை மூடவே விரும்புகின்றோம். ஆனால் முகாமில் உள்ள மக்களில் சிலர் முகாம்களிலேயே தங்கியிருக்க விரும்புகின்றனர். அதற்கு காரணம் கிராமங்களையும் பார்க்க அவர்களுக்கு நல்ல வசதிகள் முகாம்களில் கிடைக்கப்பெறுகின்றது.
இனப்பிரச்சினக்கான தீர்வு விடயமாக சிறுபாண்மை மக்களுக்கான அரசியல் தீர்வு விடயமாக பேசவுள்ளோம். அத்துடன் வட மகாணத்திற்கான மாகாண சபைத் தேர்தலும் நடாத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment