Tuesday, January 19, 2010

இந்த நாட்டை பிரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டேன். சரத் பொன்சேகா.

மஹிந்த அரசு புலிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
பிளவுபடவிருந்த இந்நாட்டை அபூர்வமான தியாகங்களைச் செய்து புலிப்பயங்கரவாதிகளை ஆழித்தொழித்தன் ஊடாக காப்பாற்றிய நான் எந்த சந்தர்ப்பத்திலும் பிளவு படுத்துவதற்கு எவருக்கும் இடமளியேன் என நேற்று ஹம்பாந்தோட்டை திஸமகரகமவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நாட்டில் எதிரும் புதிருமாக இருந்த அரசியல் கட்சிகளை முதன்முறையாக ஒன்றிணைத்துள்ளாக கூறிய அவர் இவ் ஒற்றுமையினைக் கொண்டு தான் எதிர்பார்க்கும் நம்பிக்கையான மாற்றத்தினை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

மஹிந்த அரசு புலிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

அதே மேடையில் பேசிய ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, நாட்டுப்பாற்றாளர்கள் என பிதற்றிக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ச குடும்பம் இன்று சுயலாபங்களை அடைவதற்காக புலிகளுடன் திரைமறைவில் பேச்சுக்;களில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச செல்லும்போது புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தாவுடன் நெருக்கமான உறவினை பேணிவருவதாகவும் அதற்கான ஆதாரமாக அவர்கள் இருவரும் தோள்களில் கைகளை போட்டுக்கொண்டு நிற்கும் புகைப்படத்தினையும் அங்கு குழுமியிருந்த மக்களுக்கு காண்பித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com