Friday, January 22, 2010

ரிரான் அலக்ஸ் வீடு மீது தாக்குதல்.

சந்திரிகா, ஜெனரல் பொன்சேகா, ரணில் உட்பட பல தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணியில் அங்கம் வகிக்கும் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (மக்கள் பிரிவு) எனும் கட்சியின் பொதுச் செயலாளர் ரிரான் அலக்ஸ் வீடு மீது இன்று அதிகாலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வீடு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு தரிந்து நின்ற வாகனங்களும் முற்றாக சேதமடைந்துள்ளது. ஆனால் எவ்வித உயிர்சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, எதிர்கட்சிகள் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல தலைவர்கள் நேரில் சென்று சம்பவத்தினை பார்வையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள்.

சந்திரிகா : இத்தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றக்கொள்ளவேண்டும் எனவும், நாட்டில் தேர்தல் வன்முறைகளைத் தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்து எவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெனரல் பொன்சேகா :
இவ்வாறான சகல விடயங்களும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலேயே இடம்பெறுகின்றன. நான் இவ்வரசாங்கத்தின் நான்கு வருட ஆட்சியில் அவர்களுடன் நெருங்கியிருந்தவன் என்ற வகையில் இதைக் கூறுகின்றேன். இங்கு இடம்பெறும் ஒவ்வொரு வன்முறைகளும் ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரிலேயே இடம்பெறுகின்றது.

ரிரான் அலெக்ஸ் :
இத்தாக்குதலை அரசே மேற்கொண்டுள்ளது. நாமல் ராஜபக்சவிற்கும் எமில் காந்தவிற்கும் தொடர்பு இருப்பதாக மக்களுக்கு காண்பிக்கப்பட்ட புகைப்படங்களை நானே வெளிவிட்டேன் என அவர்கள் சந்தேகிப்பதால் இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment