Friday, January 8, 2010

அல்கொய்தாவை ஒழிக்க எதையும் செய்வோம்: ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளைமாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அதிபர் என்ற முறையில், நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. பாதுகாப்பு அமைப்புகள் தவறு செய்தால், அதற்கு நானே பொறுப்பு.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, உளவுத்துறை முடுக்கி விடப்பட்டது. ஆனால் சமீபகாலமாக இதில் மந்தநிலை தோன்றி விட்டது. இனிமேல் இத்தகைய தாக்குதல் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இனிமேல் உளவுத்துறை தோல்விக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும். அல்கொய்தாவுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். அல்கொய்தாவை ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டுமோ,அதைச் செய்வோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment