Saturday, January 23, 2010

இலங்கையில் தேர்தல் வன்முறைகள் குறித்து விசாரணை தேவை: ஆம்னெஸ்டி

இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் (சர்வதேச மன்னிப்பு சபை) கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் தொடர்பாக பல்வேறு கொலை முயற்சிகள் உட்பட சுமார் 600 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள் கூறியுள்ளதாகவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மற்றும் திரிகோணமலை பகுதிகளில் பிள்ளையான், கருணா ஆகியோரின் ஆதரவாளர்கள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment