Sunday, January 24, 2010

போராட்டத்தைநிறுத்த மாட்டேன். ஒபாமா

அமெரிக்கர்களுக்கான போராட்டத்தை தான் நிறுத்தப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மாசாசுசெட்ஸ் செனட் இடத்துக்கான தேர்தலில் அவரது ஜனநாயக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

திரு ஒபாமா அறிவித்துள்ள சுகாதார கவனிப்பு திட்டமும் வேறு சில திட்டங்களும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் குடியரசுக் கட்சியினர் அத்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் நியாயமான பங்கு கிடைக்கச் செய்வதற்கான போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று ஒபாமா கூறினார்.

ஒஹையோ மாநிலத்தில் மக்களை சந்தித்துப் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் முன்னுரைத்துள்ள சுகாதார கவனிப்புத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மாசாசுசெட்ஸ் செனட் இடத்துக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணத்தை திரு ஒபாமா குறிப்பிட்டார்.

“எனக்கு அமெரிக்க மக்களுடனான நேரடி தொடர்பு குறைந்துவிட்டது. அடுத்தடுத்து பல பிரச்சினைகளைக் கையாளுவதிலேயே நான் அதிக நேரத்தையும் கவனத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயத்தால் அமெரிக்க மக்களுடன் எனக்கு இருந்த பிணைப்பு பலவீனமாகிவிட்டது உண்மைதான்” என்றார் அவர்.

“கடந்த ஓராண்டு மிகவும் இக்கட்டான காலமாகத்தான் இருந்தது. வெள்ளை மாளிகையில் நான் அடியெடுத்து வைத்த நேரமே நெருக்கடியான நேரம்தான். ஆனால் இப்போது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அமெரிக்க மக்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களால் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்று ஒபாமா கூறினார்.

No comments:

Post a Comment