ஜனாதிபதி நியாயமான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பார். சித்தார்த்தன்
ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்சியின் போது தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்குவாரென புளொட் இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி சொன்னதைச் செய்பவர் என்பதை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிரூபித்திருக்கிறார். இடம்பெயர்ந்த மக்களை ஆறுமாத காலத்தினுள் குடியமர்த்தப் போவதாகவும், தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யப் போவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற ஜனநாயகத்தை முன்னெடுத்து வந்த ஒருவராலேயே சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.
எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்தவொரு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். புலிகளின் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை அரசு செயற்படுத்தி வரும் அவ்வேளை யில் இவற்றைக் குழப்பி எமது சமூகத்திற்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் நாம் மிகவும் அவ தானத்துடன் இருக்கிறோம். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூறும் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் பாராளுமன்றம் எப்போதும் குழப்பகரமானதாகவே இருக்கும். தனக்கென ஒரு பலத்தை பாராளுமன்றத்தில் கொண்டிருக்காதவரையில் அவரால் நாட்டை முன்நோக்கிச்செல்ல முடியாது.
எதிர்க்கட்சி வேட்பாளர் சிறுபான்மை இனத்தைப் பற் றியோ, தமிழ் மக்களைப் பற்றியோ எந்தவிதமான விடயங்களையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறவில்லை. அவர் வெளியிட்ட 10 அம்ச விடயங்க ளைத் தவிர வேறு உடன்பாடுகள் எதுவுமில்லையென அவரது அணியைச் சார்ந்தவர்களே கூறியுள்ளனர். என புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கதரிசனத்துடனும் சமூகப் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்வோம்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலை இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகவே கருதுகிறோம். 30 ஆண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
40 ஆண்டுகால அரசியல் பின்புலத்தையும் அதேயளவு காலப்பகுதி இராணுவ பின்புலத்தையும் கொண்ட இருவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.
தேர்தலை பகிஷ்கரிப்பதோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரிப்பதோ அல்லது வெற்றிபெற வாய்ப்பில்லாத வேட்பாளரை ஆதரிப்பதோ தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவாது என ஆன்மீகத் தலைவர்களும், கல்வியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
வெல்லக்கூடிய வேட்பாளருடன் பேரம் பேசி தமி¡ மக்களின் உடனடி நீண்டகால அபிலாசைகள் வென்றேடுக்கப்பட வேண்டுமென நியாயமாகவே எதிர்பார்க்கிறார்கள்.
இது நிகழ வேண்டுமானால், எதிர்காலத்தில் ஜனநாயக சூழலொன்று நிலவ வேண்டும். சர்வாதிகாரப்பட்ட சூழ்நிலையிலோ சர்வாதிகார மனோபாவம் கொண்டவரிடமோ இத்தகைய கோரிக்கைகளை நாம் விடுக்க முடியாது.
அந்த வகையில் கடந்த காலத்தில் கடந்து வந்த பாதையில் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுத்த, கடந்த 20 வருடங்களாக நிலவிய வன்முறை கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சாரும்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏ-9 பாதை மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் தென்னிலங்கை சென்றால் பொலிஸில் பதியும் நடைமுறை நீக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டிருக் கிறது. மக்களுக்குச் சொந்த மான உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்ற நடவடிக் கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் வைக்கப் பட்டிருந்த இளைஞர் கள், யுவதிகள், சிறுவர் சிறுமியர் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். னாதிபதி யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு அடுத்ததாக இரண்டாவது சபை நிறுவப்படுவது பற்றி பேசப்பட்டிருக்கிறது.
தெளிவின்மைகள் இருந்தாலும் அதிகாரப்பகிர்வுக்கு இவை ஆரம்ப அடிப்படையாக இருக்க முடியும்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மிக அண்மையில் அதிகாரப்பகிர்வு செயன்முறையின் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்கள் இலங்கையின் அரசியல் முறைமையில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இது முக்கியமான கருத்து.
இத்தகைய முறைமையை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இலங்கை பல்லினங்களின் தேசமாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.
கடந்த வருடம் மே 18 ஆம் திகதியுடன் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததால், அவசரகாலச் சட்டமோ, பயங்கரவாதத் தடைச்சட்டமோ இலங்கையில் இனிமேல் அவசியமற்றதென சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எங்கும் இராணுவ மயப்பட்ட சூழ்நிலை காப்பரண் கள் கூட அவசியமற்றவை.
அரசியல் பாரம்பரியம் இல்லாத ஒரு இராணுவவாத சிந்தனையுள்ளசர் பதவிக்கு வந்தால் அவருடைய இதுவரைகால வாழ்நிலை அதில் செல்வாக்குச் செலுத்தும். கடந்த காலங்களிலும் அண்மையிலும் அவர் தெரிவித்து வந்த கருத்துக்கள் இந்த நாட்டின் பல்லின தன்மைக்கு அச்சுறுத்தலானவை. சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகங்களை அண்டியே வாழ வேண்டும் என்று பேசியவர்.
அவருடைய சுவரொட்டிகளில் கூட அவர் இராணுவ சீருடையுடனேயே காணப்படுகிறார். இதன் அர்த்தம் என்ன? இலங்கையின் எதிர்கால அரசியலில் இராணுவவாத பெருமித உணர்வுதான் முன்னிறுத்தப்படுகிறது என்ற தொனிப்பொருள் இதில் இல்லையா?
மியன்மாரில் நிரந்தரமாகிவிட்டது போன்று பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் அடிக்கடி நிகழ்வது போன்ற நிலைமைகள் இங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
இலங்கை ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்ட நாடு, நாம் அனைவரும் சகல சமூகங்களும் இலங்கையர்கள் என்று பெருமிதம் அடைவதற்கான ஜனநாயக நிறுவனங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். மாறாக எதிர்நிலையில் செல்ல முடியாது.
இலங்கையின் சகல அரசியல் பரிமாணங்களை சீர்தூக்கி கருத்திற்கெடுத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே எமக்குள்ள சரியான தெரி வாகும்.
தீர்க்கதரிசனமற்ற இந்த நாட்டிற்கும் இந்தப் பிராந்தியத்திற்கும் எமது சமூகத்திற்கும் சிறுபான்மை சமூகங்களிற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய நிராகரிப்பு அரசியல் மேலும் மேலும் அழிவுகளுக்கும் இழப்புகளுக் குமே இட்டுச்செல்லும். ஜனநாயக அடித்தளம் உறுதியாக இடப்பட வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம். ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றாக இணைந்து இந்த வரலாற்றுப் பணியை முன்னெடுக்க வேண்டும்.
பொன்சேகாவின் விஞ்ஞாபனம் தமிழ் மக்கனின் பிரச்சினைகளை எவ்வகையிலும் தொடவில்லை
அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா:
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின் றோம். தமிழ் மக்கனின் அரசியல் பிரச்சினைக் குத் தீர்வு, அடிப்படை மற்றும் அன்றாடப் பிரச்சினைகளையும் தீர்ப்பது தொடர்பிலான பத்து அம்சக் கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதை செழுமைப்படுத்துவதன் ஊடாக தமிழர்கனின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்று நாம் கடந்த 20 வருடங்களாக கூநிவருகின்றோம்.
எமது கோரிக்கைகளை கிழக்கில் ஆரம்பித்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் வடக்கிலும் அதை நடைமுறைப் படுத்தவுள்ளதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத் தில் மிகத் தெனிவாக கூநியுள்ளார்.
இது தவிரவும் எமது கோரிக்கைகனில் உள்ளடக்கப் பட்டிருக்கும் ஏ 9 பாதையை முழுமையாக மக்கள் பாவனைக்கு திறந்து விடுவது, அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்ப ட்டு அப்பகுதிகனில் வாழ்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்கனில் குடியேற்றம் செய்யப்படுவது, பாதைகனில் ஏற்படுத்தப்பட்டி ருந்த தடைகள் அகற்றப்படுவது, சரணடைந்த இளைஞர், யுவதிகள், விடுவிக்கப்படுவது போன்ற பல்வேறு அம்சங்கள் இப்போதே நடைமுறைக்கு வர ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான பல நன்மை தரும் விடயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்படுவதானது எமது பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்நிக் கொள்ள முடியுமென்கின்ற நம்பிக்கையைத் தருகிறது. இவ்விடயங்களை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய ஒருவர் தேவையில்லை.
அவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் பூரணமடையச் செய்வார் என்று நாம் நம்புகின்றோம் இதையே எமது மக்கனிடமும் கூநிவருகின்றோம்.
பிரதான எதிர்க்கட்சியினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எங்கும் தமிழ் மக்கனின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வகையான தீர்வு காணப்படப் போகின்றது என்பது தொடர்பில் எதையும் காணமுடிய வில்லை. வெறுமனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ள்ள மக்களை மீளக்குடியமர்த் துவதாக மட்டும் குநிப்பிடப்பட் டுள்ளது.
எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அகதி வாழ்வு, அவலமும் தற்செயல் நிகழ்வுகள் அல்லவென் பதையும் யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் தமிழரின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் எஞ்சியிருப்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு சில அடிப்படையான பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்மொழியாமல் ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, லஞ்சம் ஊழல் ஒழிப்பு, அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, எரிபொருட்களுக்கான விலைகுறைப்பு, மருந்து இறக்குமதியில் தேசியக் கொள்கை, இளைஞர், யுவதிகளுக்கு வேலைத் திட்டம், கடன் வழங்கும் பெண்களு க்கு வங்கி, ஆயுதக்குழுக்கள் களைவு மற்றும் பாதுகாப்புப் படையினர் நவீன மயம் போன்ற விடயங்களை ஆதார சுருதியற்று குநிப்பிட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இப்படி தெனிவற்றதும், தமிழ் மக்கனின் பிரச்சினைகளை எவ்வகையிலும் தொட்டுப் பார்க்காததுமான கொள்கைகளைக் கொண்டிருக்கும் எதிரணி வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரிப்பதாக கூறுவது வேடிக்கையானது.
எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி சிந்தித்து வாக்கனிக்க வேண்டுமென்றும் வாய்க்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment