Wednesday, January 13, 2010

பொய் செய்தி வெளியிட்ட ஞாயிறு லங்காதீப செய்தி ஆசிரியர் தப்பி ஓட்டும்.

ஜனவரி 10.2010 லங்காதீபவில் தமிழ்த் தேசியக் கூட்டணி பாரளுமன்ற அங்கத்தவர் சம்பந்தனைச் செவ்வி கண்டதாக பொய்யானதும் திரித்ததுமான செய்தியை பத்திரிகையின் ஆசிரியை தயசீலி லியனகே வெளியிட்டார். இச்செய்தியை சம்பந்தன் முற்றாக மறுத்ததையடுத்து 11 தேதி விஜையா பத்திரிகை அமைப்பின் தலைவர் றஞ்சித் விஜெயவர்த்தனா விசாரணை ஒன்றை ஆரம்பித்தார்.

திரு சம்பந்தனது பத்திரிகையாளர் மகாநாட்டில் தான் பதிவுசெய்த ஒலிநாடாவை ஆதாரமாகக் கொண்டே அந்தச் செய்தியை வெளியிட்டதாக தயசீலி லியனகே தனது பத்திரிகைச் செய்தியில் கூறியிருந்தார். திரு விஜெவர்த்தனா இதுபற்றி அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களிடம் வினவியபோது , தயாசீலி குறிப்பிட்ட ஊடகவியலாளர் பிரசன்னமாயிருக்கவில்லை என்பது தெரிய வந்ததுள்ளார்.

பத்திரகையாளர் மகாநாட்டுக்குப் சென்றிராத அவரால் எவ்வாறு அந்தச் செய்தியை எழுத முடிந்தது என்று கேட்ட பொழுது தான் திரு சம்பந்தனோடு தொலைபேசியிற் கலந்துரையாடி எழுதியதாகக் கூறியுள்ளார். ஆசிரியர் குழு எந்த நாள் என்ன நேரத்தில் எந்தத் தொலைபேசி இலக்கத்தில் இந்தத் தொலைபேசிக் கலந்துரையாடல் நிகழ்ந்தது என்று எழுத்தில் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அதற்கமைய தயசீலி 11 தேதி கடிதத்தைக் கொடுத்தார். ஆனால் அவ்விபரங்கள் தொலைபேசி் நிறுவனங்களின் உதவியுடன் பரீட்சீக்கப்பட ஏற்பாடாகியதை தொடர்ந்து 12 தேதி கடிதத்தைத் திருப்பி எடுத்துவிட்டு தனது இராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துள்ளார் என இணையத்தளம் ஒன்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றது.

இதற்கிடையில் குறிப்பிட்ட பத்திரிகையின் செய்தி முகாமையாளரான ஆரியானந்தா தம்பகாவத்தை, தயாசீலியிடம் இச்செய்தியை எழுதும்படி கட்டளையிட்டதாகவும் அவர் தொடர்ந்து பத்திரிகையில் தொழில் புரிவதாக குற்ற்சாட்டப்படுகின்றது.

இதற்கு அப்பால் குறிப்பிட்ட செய்தியை எழுதுவதற்குச் சன்மானமாக 20 லட்சம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளது எனக்கூறப்படுவதுடன் ஐக்கிய தேசிய முன்னணித்தலைவர் றணில் விக்கிரமசிங்கா ஞாயிறு லங்காதீபா ஆசிரியருக்கு கிடைத்த சன்மானத்தையும் அந்தக் காசோலையின் இலக்கம் பற்றிய விபரங்களையும் அம்பலப் படுத்த உள்ளதாகத் தெரியவருகிறது.

தற்போதய தேர்தலின் முக்கிய குணாம்சம் கலகமும் காட்டுமிராண்டித்தனமும் துப்பாக்கிசூடும் குழப்பமும் மாத்திரமல்ல எண்ணற்ற பத்திரிகையாளர்கள் காசுக்கு விலைபோய் தமது மூலதர்மத்தை முதலாக்கியிருக்கிறார்கள். இதில் பல பிரசித்திபெற்ற தமிழ் ஊடகங்களும் அடங்கும். வரப்போகும் ஆட்சி என்ன லட்சணத்தில் அமையப் போகிறது என்பதை இவை கட்டியம் கூறுகின்றன.

இன்றய பொய் சேறடிப்பு சோடனை நக்கல் நையாண்டிச் செய்திகளின் எழுவாயாக திரு சம்பந்தனே உள்ளார். தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படவுள்ள துன்ப துயரங்களின் நீட்சியையும் ஒளிமயமற்ற எதிர்காலத்தையும் இவை முன்னறிவிக்கின்றன. இன்றய பத்திரிகைக் கூச்சல்களும் அமளிதுமளிகளும் 1956 பண்டாரானாயக்கா செல்வனாயகம் ஒப்பந்தம் மற்றும் 1966 தமிழ் உபயோகமொழி மசோதா காலத்தையும் விடப் பல மில்லியன்மடங்கு உக்கிரமானது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்மக்கள் தம்மைச் சுதாகரிப்பதற்குத் தயாராக வேண்டும்.

No comments:

Post a Comment