புலிகளின் நிதிக்கையாளுனர் எமில்காந்தவிற்கும் நாமலக்குமிடையேயான தொடர்பு என்ன?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் இளையோருக்கு நாளை எனும் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்சவும் புலிகளின் சர்வதேச நிதிக்கையாளுனர்களில் ஒருவரான எமில் காந்தவிற்குமிடையே ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுத் தலைவரும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் இணை ஊடகப் பேச்சாளருமான அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் மேற்படி விடயத்தை கூறிய அனுர குமார, எமில் காந்தாவுடன் நாமல் ராஜபக்ச காணப்படும் புகைப்படமொன்றையும் பகிரங்கப்படுத்தினார். அவ்வூடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் பேசும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கு இளையோருக்கு நாளை எனும் அமைப்பினால் நாளொன்றுக்கு ஒரு கோடி செலவிடப்படுவதாகவும் அப்பணம் எங்கிருந்து கிடைக்கப்பெறுகின்றது என்ற விடயத்தை பகிரங்கப்படுத்துமாறும் வேண்டினார்.
அத்துடன் நாமல் ராஜபக்ச புலிகளின் முகவரான எமில் காந்தவுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளின் விபரங்களை நாட்டின் பிரதமர் ரட்ணசிறி மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
அவர் வெளியிட்டபடம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மொட்டைத் தலையுடன் காணப்படுபவரே எமில் காந்த எனக் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment