Wednesday, January 20, 2010

வலி-வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காணி உறுதிகளுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவிப்பு !!
யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்கி, அந்தக் காணிகளை உரிய பொதுமக்களுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. வலி வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு வசதியாகவே பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

எனவே, குடியேற விரும்பும் காணி உரிமையாளர்கள், உறுதிப்படுத்துவதற்கான காணிக்குரிய ஆவணங்களுடன் வலி-வடக்கு, கோப்பாய் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு:-


ஜே-221 - இளவாலை வடக்கு கிராமசேவைப் பிரிவு முழுமையாக

ஜே-222 - இளவாலை வடமேற்கு கிராமசேவைப் பிரிவின் ஒருபகுதி

ஜே-223 - விதக்புரம் கிராமசேவைப் பிரிவு முழுமையாக

ஜே-224 - பன்னாலை கிராமசேவைப் பிரிவின் முழுமையாக

ஜே-225 - கொல்லங்கலட்டி கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி

ஜே-226 - நகுலேஸ்வரம் கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி

ஜே-228 - தெல்லிப்பளை கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி

ஜே-229 - துர்க்காபுரம் கிராமசேவைப் பிரிவு முழுமையாக

ஜே-230 - தந்தை செல்வாபுரம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி

ஜே-231 - மாவிட்டபுரம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி

ஜே-232 - மாவிட்டபுரம் தெற்கு கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி

ஜே-236 – பலாலி விடத்சாமம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி


கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு


ஜே-283 - இடைக்காடு கிராமசேவைப் பிரிவின் ஒருபகுதி


No comments:

Post a Comment