வாக்குச்சீட்டுக்கள் விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. தபால் மா அதிபர்.
வாக்குச் சீட்டுக்களின் விநியோகம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார். விநியோகங்களின் போது இரு அசம்பாவிதங்கள் நிகழ்நதுள்ளதாகவும் கூறியுள்ள அவர், கம்புறுப்பிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனைப் பிரதேசங்களில் வாக்குச்சீட்டுக்கள் பலவந்தமாக பறிக்கப்பட்ட இரு சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இதுவரை வாக்குச் சீட்டுக்கள் கிடைக்கப்பெறாத நபர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களில் தமது அடையாளங்களை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களச் சமர்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் வேண்டியுள்ளார்.
0 comments :
Post a Comment