Monday, January 4, 2010

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச்சென்ற இருவர் மீண்டும் கட்சிக்குத் திரும்புகின்றனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம் அஷ்ரப் காலத்தில் அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களும், தற்போது பிரதி அமைச்சர்களாக உள்ளவர்களுமான இருவர் மீண்டும் கட்சிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கட்சியின் தலைமைப்பிடத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் அவர்கள் எதிரணிக்கு தாவுவர் எனவும் கூறப்படுகின்றது. இவர்களை எதிர்கட்சியின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை மத்தியஸ்தத்தினை ஜனநாயக ஐக்கிய முன்னணி அங்கத்தவரான முஸ்லிம் சிரேஸ்ட அரசியல்வாதி ஒருவர் வகிப்பதாக தெரியவருகின்றது.

அதேநேரம் 2007ம் ஆண்டு அரசுடன் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் மீண்டும் கட்சிக்கு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

1 comments :

aaa January 4, 2010 at 2:33 PM  

எல்லாப்புகழும் இறைவனுக்கே

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com