பிரதியமைச்சர் வீடு மீது கிரனேட் தாக்குதல் : சாரதி பலி.
பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின் குருநாகல், வேகெர பிரதேசத்திலுள்ள வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இரும்புக் கம்பிகளால் அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டதன் விளைவாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment