Saturday, January 2, 2010

ஐரோப்பாவை போன்று இந்தியாவிலும் தமிழீழத்திற்கான தேர்தல் வேண்டுமாம்! வைகோ

இலங்கையில் தமிழீழம் அமையவேண்டும் என ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டு வரும், சர்வஜன வாக்கெடுப்பு போல தமிழகத்திலும் தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வை கோபாலசாமி கோரியுள்ளார்.

சென்னையில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் அந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் இலங்கையில் தமிழீழ உருவாக்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றினால்,தமிழீழ பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடும் என நினைத்தால் அது முட்டாள்களின் சுவர்க்கத்திற்கு சமன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் போராட்டமானது, தமிழ் தேசத்திற்கான உருவாக்கத்தை எடுத்துக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தை தமிழகத்திற்கு அனுமதிக்காத இந்திய அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு திருப்பதியில் ராஜமரியாதை வழங்கியது, தமிழர்களின் பிரச்சினையில் மன்னிக்கமுடியாது காட்டிக்கொடுப்பாகும் என்றும் வை.கோ. கருத்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment