Wednesday, January 6, 2010

நவீன் திஸாநாயக்கவும் கட்சி தாவுகின்றாரா?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரேலிய மாவட்ட அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. நாளை ஊடகவியலாளர் மாநாட்டில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ள இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நுவரேலிய மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நுவரேலியாவிலிருந்து வெளியேறி கொழும்பு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மறைந்த காமினி திஸாநாயக்கவின் புதல்வராகும். இவரது சகோதரர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேறி நேற்று அம்பாறையில் இடம்பெற்ற ஜெனரல் பொன்சேகாவின் பிரச்சாரக் கூட்டத்தில் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே.

No comments:

Post a Comment