Wednesday, January 6, 2010

கப்டன் முனசிங்க கடத்தப்பட்டாரா?

ஊவா மாகாண சபைக்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஊடாக தெரிவு செய்யப்பட்ட கப்டன் மஹிமால் முனசிங்க கடத்தப்பட்டுள்ளாக ஜேவிவி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது. இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறி கடந்த டிசம்பர் 28ம் திகதி பதுளையில் இடம்பெற்ற ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவாதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கடத்தப்பட்டு அலறி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விமல் வீரவன்சவினால் அச்சுறத்தப்பட்டாதாக அவ்விணையம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment