நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன்.
2வது ஒப்பந்தத்தை ஒழிக்கும் பொறுப்பு மக்களுடையது - ஜனாதிபதி
தாய்நாட்டுக்கெதிரான முதலாவது ஒப்பந்தத்தை நான் நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து இல்லாதொழித்தேன். இரண்டாவது ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுடையதெனவும் அதனை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிறைவேற்றுவரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வன்முறைக்கும் விரோத அரசியலுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லையென தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்திலிருந்து மீட்டு ஒன்றிணைந்துள்ள நாட்டைப் பாதுகாத்து ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று குருநாகல் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பா, எஸ். பி. நாவின்ன, சாலிந்த திசாநாயக்க, பாட்டலி சம்பிக்கை ரணவக்க, முன்னாள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட கலைஞர்கள், கட்சித் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
மதுரங்குழி பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஐயர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் வன்முறை யுகம் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.
இதனை முடிவுக்குக் கொண்டுவரவும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முடிவு கட்டவும் எதிர்வரும் 26ம் திகதி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்துவதற்காக மக்கள் இந்த நாட்டைப் பாரம்கொடுத்தார்கள். அதனை நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.
தனி நிர்வாக அதிகாரத்துடன் அடையாள அட்டையிலிருந்து சகலதையும் தமக்கென தனியாக வைத்திருந்த பயங்கரவாதியிடமிருந்து நாட்டை மீட்டு தற்போது ஒரு கொடியின் கீழ் அனைத்தையும் கொண்டுவர முடிந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு அடிபணிந்து முதுகெலும்பில்லாமல் எம் தலைவர்கள் செயற்பட்ட யுகத்துக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.
நாம் யுத்தத்தை மாத்திரம் முன்னெடுக்க வில்லை. நாட்டில் அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அத்துடன் அரச துறையை மேம்படுத்தும் வகையில் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது. நாம் இந்த நாட்டை ஆசிய பிராந்தியத்திலேயே பெறுமதிமிக்க நாடாக மாற்ற பின்புலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். வடக்கு கிழக்கு உட்பட சகல பிரதேசங்களையும் அபிவிரு த்தியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
எம்மைப் பற்றி பல அவதூறுகள், சேறு பூசுதல்கள் இடம்பெறுகின்றன. எம்முடனுள்ள விமல் வீரவன்ச, ஜோன்சன் பெர்னாண்டோ போன்றவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எந்தவித சவால்களையும் ஏற்க நாம் தயார்.
வைராக்கியமும் குரோதமும் நிறைந்த அரசியலுக்கு இந்த நாட்டில் இனி இடமில்லை. நாமும் நாட்டு மக்களும் அதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
பணத்திற்கு விலைபோகும் அரசியல்வாதிகள் எம்மிடமில்லை. 30 மில்லியன் ரூபாவுக்கு முஸம்மிலை விலைபேசியுள்ள விடயம் அம்பலமாகி யுள்ளது.
0 comments :
Post a Comment