Saturday, January 23, 2010

பிள்ளையானது வீட்டில் போலி வாக்குச் சீட்டுக்கள்.

பெருந்தொகையான போலி வாக்குச் சீட்டுக்கள் பிள்ளையானது வசிப்பிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றது. இன்று அதிகாலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்த அதிகாரிகளால் இவ்வாக்குச் சீட்டுக்கள் 42-3944 எனும் பதிவிலக்கத்தை கொண்ட டிபென்டர் ஜீப் வண்டியில் கொண்டுவந்து இறக்கப்பட்டதாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

அதே நேரம் இவ்வாகனத்தில் கிழக்கு மாகாணத்தில் வேறு சில இடங்களிலும் இவ்வாறான வாக்குச் சீட்டுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்ள்ளது.

மக்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமைக்கு புலிகள் காலம்காலமாக வேட்டு வைத்துவந்திருக்கின்றார்கள். அதை புலிகளின் வழித்தோன்றல்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப் படுத்த முனைவது பலராலும் கண்டிக்கப்படுகின்றது.

தமது தகுதிகளுக்கு அப்பால் மஹிந்தவினால் வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களுக்கு குறிப்பிட்ட நபர்கள் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவர்கள் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அவ்வரப்பிரசாதங்களுக்காக மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு தடைவிதித்து, வாக்களிக்கும் உரிமைக்கு சாவு மணியடித்து கள்ளவாக்கு திணித்து நன்றிக்கடன் செலுத்த முனைவது கண்டனத்திற்கு உரியதாகும்.

அதேநேரம் நாடுபூராகவும் இவ்வாறான 300000 போலி வாக்குச் சீட்டுக்கள் உலாவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இவற்றை கைப்பற்றுவதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவ்வாறான போலி வாக்குச் சீட்டுக்கள் 21700 கொழும்பு கோட்டைப் பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை புத்தளம் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்படவிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தேர்தல் விடயங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்தின தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment