கிளிநொச்சியில் ஜெனரலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்.
கிளிநொச்சிப் பிரதேசத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இருவர் மீது ஆயுதம் தாங்கிய குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதுடன் அவர்கள் பயணம் செய்த வாகனமும் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்று பிற்பகல் குருநாகல் பிரதேசத்தில் ஜெனரல் சார்பாக இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது லாண்ட் றோவர் , வான் , மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகள் மற்றும் இரும்புப் பொல்லுகள், தடிகள் சகிதம் வந்தவர்கள் மேற்கொண்ட தாறுமாறான தாக்குதலில் நால்வர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment