ஜனாதிபதியின் பாரியார் நேற்று வவுனியா விஜயம்
ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிரந்தி ராஜபக்ஷ நேற்று வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டார்.மாவட்டத்தில் உள்ள மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுமியர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களுக்கு சுய உதவிக்கான உதவிகளும் வழங்கப்பட்டன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment