Wednesday, January 20, 2010

டக்ளஸ், முன்னால் பொலிஸ் மா அதிபர் யாழில் வாக்குமோசடிகளுக்கு தயார்.

எதிர்வரும் தேர்தலில் யாழ் மாவட்ட வாக்குகளில் மோசடிகளை மேற்கொள்வதற்கு டக்ளஸ் தேவானந்தா , முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரானந்த டீ சில்வா மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ , பொலிஸ் அதிகாரிகள் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கான தேர்தல் பிரச்சார மேடைகள் பலவற்றில் பேசுகின்ற ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜெனரல் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் வடகிழக்கு பகுதிகளில் செயற்படுகின்ற சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் முற்றாக தடைசெய்யப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

அதே நேரம் ஜனாதிபதி டக்ளஸ் தேவானந்தாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பு கோட்டை அரச மரத்தின் கீழ் சத்தியாக்கிரகம் இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment