கோத்தபய மனைவி பணத்துடன் வெளிநாடு ஓட்டம்?
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைக் கூடும் என்ற பயத்தில் பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சேவின் மனைவி கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் ஆசிய நாடு ஒன்றுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வரும் 26ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதானமாக தற்போதைய அதிபர் ராஜபக்சேவும், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகாவும் மோதுகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் ராஜபக்சேவின் செல்வாக்கு இலங்கையில் நாளுக்குநாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என்ற முறையில் பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் பலர் தங்களின் சொத்துக்களை பதுக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்று வருவதாகவும், கோத்தபயவின் மனைவி கோடிக்கணக்கான பணத்துடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசுக்கு சொந்தமான ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள பலர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தன்வசம் உள்ள மீதிப் பணத்தையும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்ற கோத்தபய முயன்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து பணத்தையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல விதிமுறைகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
0 comments :
Post a Comment