Tuesday, January 12, 2010

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட மருத்துவ கப்பல் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப்போரின் போது (1943-ஆம் ஆண்டு மே மாதம்) ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட தி சென்டார் என்ற ஆஸ்திரேலிய மருத்துவ கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட குழு டிசம்பர் 20-ந்தேதி மோர்தான் தீவிற்கு சுமார் 30 மைல்கள் தொலைவில் குயின்ஸ்லேண்ட் என்னுமிடத்தில் இக்கப்பலை கண்டுபிடித்தது. கடலுக்கு அடியில் சுமார் 2 கி.மீ தொலைவில் இருந்த கப்பலை விசேஷ காமிரா படம் பிடித்தது. இதுகுறித்து குழுவின் இயக்குனர் டேவிட் மியர்ன்ஸ் கூறுகையில், 66 வருடங்களாக விடை தெரியாமல் இருந்த கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கப்பலில் பயணம் செய்த 332 பேர்களில் 64 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 12 நர்சுகளில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

No comments:

Post a Comment