லண்டனைச் சேர்ந்த பிரபல இணையதளம் தகர்ப்பு
லண்டனைச் சேர்ந்த 'ஜீவிஸ் கிரானிக்கிள்' என்னும் யூத மதத்திற்கு ஆதரவான வார இதழின் இணையதளம் சில தொழில்நுட்ப குற்றவாளிகளால் தகர்க்கப்பட்டது. இத்தகவலை அதன் ஆசிரியர் ஸ்டீபன் போல்ரட் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த இணையதளத்தின் தகவல்களை சேதப்படுத்திய நபர்கள் அதில் பாலஸ்தீன கொடியை பிரசுரித்தனர். மேலும், பல மணி நேரங்களுக்கு யூத எதிர்ப்பு தகவல்கள் அதில் வெளியிட்டனர்.
இணையதளத்தை சேதப்படுத்தியவர்கள் தங்களை 'பாலஸ்தீனிய முஜாஹீத்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
வார இதழான 'ஜீவிஸ் கிரானிக்கிள்' 1841ம் ஆண்டு முதல் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment