தேர்லில் வாபஸ்பெறுவது தொடர்பாக எவ்வித எழுத்துமூல அறிவித்தலுமில்லை.
எதிர்வரும் தேர்தலின் வேட்பாளர்கள் சிலர் தாம் தேர்தலிருந்து வாபஸ்பெறுவதாக மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளபோதிலும் எவரிடமிருந்தும் உத்தியோக பூர்வமாக எழுத்துமூல அறிவித்தல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் திணைக்களத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களான மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா, தேரர் பத்தரமுல்ல சீலாரத்ன ஆகியோரே தாம் தேர்தலிலிருந்து வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளானர்.
எதுஎவ்வாறாயினும் இவர்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச ஊடகளில் வழங்கப்பட்டுள்ள ஒலி-ஒளி பரப்பு நேரங்கள் வாபஸ் பெறப்படுமென தெரிவித்துள்ள அவர் வாக்குச்சீட்டக்களில் அவர்களது பெயர்கள் நீக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment