புலிகளின் சொத்துக்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்கள் ஆதாரமற்றவை. ஹெந்தவித்தாரண.
அரசாங்கம் புலிகளின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக வெளிவருகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதும் என தேசிய புலனாய்வுத் துறையின் பிரதானி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண தெரிவித்துள்ளார். தேசிய பாதுகப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் , மேற்படி குற்றச்சாட்டுக்கள் புலனாய்வு விடயங்களில் ஈடுபட்டுள்ளோரை அதைரியப்படுத்தியுள்ளதுடன் நாட்டுக்கு நன்மை பயக்கத்தக்கவிதத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளையும் பாதித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறான கடந்தகால காட்டிக்கொடுப்புக்கள் புலனாய்வு அதிகாரிகளின் உயிர்களையும் காவுகொண்டுள்ளதாகவும் குறப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment