Tuesday, January 19, 2010

கேபி யை விடுதலை செய்ய அரசு ரகசிய ஒப்பந்தம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதை அடுத்து புலிகளின் சர்வதேச முகவர்களுடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயல்வதாக எதிர்கட்சிகளின் இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச புலிகளின் சர்வதேச நிதிக்கையாளுநர்களின் ஒருவரான எமில் காந்தவும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுவதுடன், அவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் புலிகளுக்காக பல ஆண்டுகள் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டுவந்த கேபியை விடுதலை செய்வதென ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதே நேரம் சிங்கப்பூர் சென்றுள்ள மஹிந்த, பசில், கோத்தபாய ராஜபக்சக்கள் புலிகளின் சர்வதேச தலைவர்கள் பலரை சந்தித்து பேசியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com