Wednesday, January 20, 2010

ஜெனரல் சரத் பொன்செகாவின் மருமகனின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானதா?

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுக்க திலகரட்டன சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலங்தில் ஆயுத விநியோகத்திற்கான ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அரச தரப்பினரால் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருகின்றன.

இது குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிமிர்த்தம் விசாரணைக்காக அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்திருந்தனர். இவ் அழைப்பாணையினை ஏற்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செல்ல மறுத்த தனுக்க, இவ்விடயத்தினை கையாள்வதற்காக சட்டத்தரணிகளை நியமித்திருந்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இன்று தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ள ஜெனரல் பொன்சேகா, ஆதரமற்ற குற்றச்சாட்டொன்றினை கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறிப்பிட்ட விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு காணப்படும் வேலைப்பளு காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இருக்குமானால் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுர குமார திஸாநாயக்க , ஜெனரலின் மருமகன் மீது இக்குற்றச்சாட்க்களை மேற்கொண்டவர்கள் மீது தகுந்த நேரம்வரும்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment