பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் தேரர்கள் ஹெல உறுமயவினர் அல்லர். ஹம்மன்பில
ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகள் 6 பேர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய ஹம்பன்பில, மேற்படி தேரர்கள் கடந்த 2005ம் ஆண்டு ஆடிய அதே நாடகத்தினை இம்முறையும் ஆட முனைந்துள்தாகவும் அவர்களுக்கும் ஹெல உறுமயவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளதுடன் முடிந்தால் அவர்கள் தாம் கடந்த 5 வருடங்களாக ஹெல உறுமயவின் உறுப்புரிமையை கொண்டுள்ளார்கள் என நிருபித்துக் காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார உத்திகள் பிக்குகளை மேடைகளுக்கு கொண்டுவருமளவிற்கு மிகவும் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பிக்குகள் அவர்களின் விருப்பிற்கு எற்ப பொன்சேகாவை ஆதரிக்க முடியுமெனவும் ஆனால் அவர்கள் அதற்காக ஹெல உறுமயவின் பெயரை பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment