ஜேவிபி யின் தலைமைக் காரியாலயம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் கலவௌ வில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயம் சற்று நேரத்திற்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. துப்பாக்கிகள் மற்றும் பொல்லுகளுடன் வந்த மஹிந்த ராஜபக்சவின் குழுவொன்றே தாக்தலை மேற்கொண்டாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று கூறுகின்றது.
இத்தாக்குதலில் காரியாலயம் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பலத்த தாக்குதலுக்கு உள்ளான கட்சியின் செயற்பாட்டாளர்கள் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பொலிஸில் முறையிடுவதற்கு சென்ற ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரை, தாக்குதல் நாடாத்தியோர் பொலிஸ் நிலையத்திற்கு செல்லவிடாமல் பாதைகளை மறித்து தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் பா.உ ரணவீர பத்திரண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment