வேலுப்பிள்ளையின் மரணச்சடங்கு சிவாஜிலிங்கத்தின் முதலில்லா வியாபாரம்.
இலங்கையிலே யுத்தம் முடிவுற்ற தறுவாயில் 3 லட்சம் பொதுமக்கள் மந்தைகள் போல் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது எத்தனையோ வயோதிபர்கள் , குழந்தைகள் அம்முகாம்களில் உயிரிழந்திருந்தனர். அவ்வுடலங்களை முகாம்களில் இருந்துகூட அகற்றாமல் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய அரசாங்கம், வேலுப்பிள்ளையின் சடலத்திற்கு ராஜமரியாதை வழங்கியுள்ளது.
யாழ் மக்களின் வாக்குகள் பொன்சேகாவிற்கு சென்றுவிடாமல் சிவாஜிலிங்கத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காக வேலுப்பிள்ளை யின் புதல்வி தனது தகப்பனின் பிணத்தை ஏலத்தில் விட்டுள்ளார். இறந்த ஒர் மனிதனுக்கான இறுதி கிரிகைகள் முறைப்படி இடம்பெறவேண்டும் என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது. பிரபாகரனின் சரித்திரம் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்கு நிம்மதி என நினைத்த மக்களுக்கு இவ்விடயம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தகாலகட்டங்களில் தமிழ் அப்பாவிகள் இடைத்தங்கல் முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் , உயிரிழந்தபோது அவர்களின் உடன்பிறந்த உரித்துடையோர் அருகிலிருந்து உடலங்களை ஏற்க முயற்சித்தபோதும் , அவ்வுடலங்கள் அரச செலவில் அநாதைப் பிணங்களாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் பலவுண்டு.
இந்நிலையில் வேலுப்பிள்ளையின் சடலம் உரித்துடையோரால் ஏற்கப்பட்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை. சிவாஜிலிங்கத்தின் கேவலம்கெட்ட அரசியல் வியாபாரத்திற்கு பிரபாகரன் குடும்பம் துணை நின்றதானது தொடர்ந்தும் எம் சமுகத்தின் அழிவில் அவர்கள் இன்பம் காணத்துடிக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது. தங்கள் தந்தையின்மீது பாசமுள்ளவர்களாக இருந்திருந்தால் அவர்கள் உடனடியாக இலங்கை வந்து உடலத்தை பாரமெடுத்திருக்கவேண்டும். மாறாக அரசியல் நாடகம் ஆடியிருக்கின்றார்கள்.
இன்று தந்தையின் உடலத்தை சிவாஜிலிங்கத்திடம் பாரமளிக்க ஒப்புதல் அளித்தவர்கள் அன்று பிரபாகரனின் உடலம் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டபோது ஏன் உடலத்தை உரிமைகோரவில்லை. உடனடியாக வக்கீல்கள் ஊடாக இலங்கை அரசிடம் உடலத்தை கோரியிருக்க முடியும். அன்று அவர்கள் அவ்வாறு செய்திருந்தார்களேயானால் தமது சகோதரன் சரணாகதியடைந்ததும் எவ்வாறு கோழையாக மரணத்தை தழுவினார் என்பதும் மரண பரிசோதனையினூடாக வெளிவந்து , தொடர்ந்தும் தமிழ்; மக்களை ஏமாற்ற முடியாது போய்விடும் என்ற காரணத்திற்காக பிரபாகரனது பிணத்தை கைவிட்டனர்.
ஆனால் இன்று மஹிந்தவிற்கு ஆதரவாக தேர்தலில் நிற்கும் சிவாஜிலிங்கத்தின் பித்தலாட்டத்திற்கு தகப்பனின் உடலத்தை தானம் செய்துள்ளனர்.
இவ்வாறு இறந்த பிணத்தை கூட வைத்து பித்தலாட்டம் ஆடும் கும்பல்களுக்கு ஆதரவாக தமிழ் இணையங்களும் சாமரம் வீசிக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது. அவற்றுக்கும் அப்பால் வேலுப்பிள்ளை நடந்தால் புல்லுச்சாகாத மனிதர் என வர்ணிக்கவும் அவ்விணையங்கள் பின்நிற்கவில்லை. மாறாக இவ்விணையங்கள் பிரபாகரனின் கொடுங்கோலாட்சியை வேலுப்பிள்ளை வன்னியில் பார்த்து ரசித்தார் என்பதை மறைக்கமுயல்கின்றன.
வேலுப்பிள்ளை உண்மையில் தனது மூத்த மகன் மனோகரனுடன் இந்தியாவில் சேலம் சந்தியில் அளகாபுரம் எனும் தெருவில் 1985 , 1986 காலப்பகுதளில் கோழிக்கடை நடாத்தி பிளைத்துவந்தவர். அவருக்கும் பிரபாகரனது போராட்டத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர் கடைசி காலத்தில் பிரபாகரனின் அராஜகங்களை ஏற்று பிரபாகரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனிதர் என்பதை மறந்து விடமுடியாது.
0 comments :
Post a Comment