குடா நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் ஊக்குவிப்பு!
யாழ். குடாநாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதலீட்டு சபை எடுத்து வருகிறது. இது தொடர்பாக முதலீட்டு சபையின் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்புக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் ஏ. எம். சி. குலசேகரவின் தலைமையிலான குழு வட பகுதியில் முதலீட்டு வாய்ப்புக்களில் ஈடுபட விரும்பும் வர்த்தக சமூகத்தினரை இன்று 5 ஆம் திகதியும் நாளை 6 ஆம் திகதியும் சந்தித்து பேசுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ சிட்டி ஹோட்டலில் இந்த வர்த்தக சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை மேற்படி முதலீட்டு சபை குழு யாழ். பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நாளை 6 ஆம் திகதியும் நாளை மறு நாள் 7 ஆம் திகதியும்ää யுத்தத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் முதலாவது வர்த்தக ரீதியிலான கருத்தமர்வு ஒன்றிலும் கலந்து கொள்கிறது.
வட மாகாணத்தில் வர்த்தக வாய்ப்புகளில் ஈடுபட விரும்பும் வர்த்தகர்கள் யாழ். டில்கோ சிட்டி ஹோட்டலில் முதலீட்டு சபையின் தூதுக்குழுவை நேரடியாக சந்தித்து பேசலாம். அல்லது யாழ். பொது நூலகத்தில் இடம்பெறும் கருத்தமர்வில் கலந்து கொண்டு தமது வர்த்தக வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முதலீட்டு சபை தூதுக்குழுவினரை சந்தித்து பேச விரும்பும் வர்த்தகர்கள் முதலீ டுக்கான பணிப்பாளர் எஸ். பண்டாரவை 0777915477 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது ஊக்குவிப்புக்கான பணிப்பாளர் சி. இக்னேஷியஸை 0777915477 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இதேவேளை யாழ்ப்பாணத்தில் முதலீட்டு சபை தனது கிளையொன்றை திறக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினகரன் 05.01.2010
0 comments :
Post a Comment