யுத்த வெற்றிக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. கோத்தாபய
முப்பது ஆண்டுகள் நாட்டில் நிலைகொன்டிருந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு அளப்பெரியது என “தேசத்தைக் கட்டியெழுப்ப தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு” எனும் தலைப்பில் மைக்றோ சொப்ட் நிறுவனம் நேற்று(ஜன 04) கொழும்பு சினமன்ட் லேக்சைட் ஹோட்டலில் எற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொன்டு உரையாற்றும் போது பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர்,மேஜர் ஜெனரல் சவேன்திர சில்வா மற்றும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் சிரான் டி சில்வா ஆகியோரும் உரையாற்றினர்.
தகவல் தொழில்நுட்பத்தையும், ஆளில்லா விமானத்தையும் பயன்படுத்தியதன் மூலம் சிவிலியன்களின் எந்தவித உயிர்ச் சேதங்களும் இன்றி மனிதாபிமான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவுக்குக் கொண்டுவர முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியான தலைமைத்துவத்தை முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கியதுடன் சகலருக்கும் ஒரே இலக்கை வழங்கினார். இதற்கு மேலதிகமாக நவீன ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம், நவீன உத்திகள் பயன்படுத்தப்பட்டன.
இதே தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலிகளின் ஆதரவாளர்களும், புலிகள் சார்பு ஊடகங்களும் படை நடவடிக்கைகளுக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை செய்து சர்வதேசத்தின் அழுத்தத்தை எம்மீது புகுத்த முயன்றனர்.
0 comments :
Post a Comment