சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோர் ரெலோ அமைப்பிலிருந்து நீக்கம்: அடைக்கலநாதன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம்
அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment