ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர்ள் மீது ஒருகொடவத்தையில் தாக்குதல் :
ஒருகொடவத்தை பிரதேசத்தில் இன்றுகாலை தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜேவிவி குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் 119 எனப்படும் அவசரசேவை பொலிஸார் இருந்தாகவும், தாக்குதல் தாரிகள் பொலிஸாரை மிரட்டியபோது அவர்கள் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான நால்வர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக தெமட்டக்கொட பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடச்சென்றபோது, பொலிஸார் அவர்களின் முறைப்பாட்டை எற்க மறுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment